valampurii: சுயநலம் கருதாத அரசியலே விடுதலையைப் பெற்றுத் தரும்
2019-06-05 12:43:52
Brief: மிகப்பெரும் தியாகத்தை நடத்திய வீர இளைஞர்கள் பிறந்து வாழ்ந்த தமிழினத்தில் இன்று துரோகிகள் சொந்த இலாபத்துக்காகவும் பதவி ஆசையாலும் எங்கள் இனத்தை விற்றுவிட்டதுதான் மிகப்பெரிய வேதனை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதில்கூட ஒருமித்துத் தீர்மானம் எடுக்க முடியாத தமிழ் அரசியல்வாதிகளை இன்னும் நம் தமிழினம் நம்புகிறது என்றால் யார்தான் என்ன செய்ய முடியும்.
முஸ்லிம் இனத்துக்கு ஆபத்து என்றவுடன் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பெளஸி போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு கணப்பொழுதில் ஒன்று கூடுகின்றனர்.
ஆனால் இங்கோ தமிழ் மக்களின் ஏகோ பித்த ஆதரவைப் பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இரவோடு இரவாக ஆளு நர் அலுவலகத்தில் கையளிக்கின்ற கயமை நடந்தது. எப்படி இருக்கிறது எங்கள் இனத்தின் ஒற்றுமை.
முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள் என அனைவரும் ஒன்றாகப் பதவி விலகியமை முஸ்லிம் இனத்துக்கான அரசியலாளர் களின் ஒற்றுமையையும் சுயநலம் இல்லாத இன நலனையும் வெளிப்படுத்திநிற்கிறது.
கட்சி பேதங்கடந்து, தேர்தல் அரசியல் பற்றி இம்மியும் கருதாமல் முஸ்லிம் இனம் என்ற ஒரே இலக்கில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட விதத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
இந்த வியப்பை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தி நிற்பதற்கு எங்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் பலயீனமும் காரணமாகும்.
அதாவது தமிழ் மக்கள் வன்னிப் போரில் கொன்றொழிக்கப்பட்டபோதுகூட எங்கள் அரசி யல்வாதிகள் ஒன்றுபடவில்லை.
இனியும் ஒற்றுமைப்படப் போவதில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.
மிகப்பெரும் தியாகத்தை நடத்திய வீர இளைஞர்கள் பிறந்து வாழ்ந்த தமிழினத்தில் இன்று துரோகிகள் சொந்த இலாபத்துக்காகவும் பதவி ஆசையாலும் எங்கள் இனத்தை விற்றுவிட்டதுதான் மிகப்பெரிய வேதனை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதில்கூட ஒருமித்துத் தீர்மானம் எடுக்க முடியாத தமிழ் அரசியல்வாதிகளை இன்னும் நம் தமிழினம் நம்புகிறது என்றால் யார்தான் என்ன செய்ய முடியும்.
முஸ்லிம் இனத்துக்கு ஆபத்து என்றவுடன் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பெளஸி போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு கணப்பொழுதில் ஒன்று கூடுகின்றனர்.
ஆனால் இங்கோ தமிழ் மக்களின் ஏகோ பித்த ஆதரவைப் பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இரவோடு இரவாக ஆளு நர் அலுவலகத்தில் கையளிக்கின்ற கயமை நடந்தது. எப்படி இருக்கிறது எங்கள் இனத்தின் ஒற்றுமை.
அமைச்சுப் பதவியில் இருந்து விலகு என்று ஒரு முஸ்லிம் அமைச்சரைக் கேட்டதற் காக, உங்கள் அரசில் – ஆட்சியில் இருந்து நாங்கள் அத்தனை பேரும் விலகுகிறோம் என்று கூறுகின்ற அளவில் அவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது என்றால்,
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி யில் இருந்து விலகுவேன் என்று கூறுகின்ற திராணி சம்பந்தரிடம் இருந்ததா?
அல்லது இதையாவது எடுத்துக்கூறும் துணிவேனும் அறம் உரைப்போரிடம் இருந் ததா?
சொந்தப் பகைமையை பொதுப் பகையாக்கி, எதிர்த் தாக்குதல் செய்யார் என்றிருப்போரை சொல்லாலும் எழுத்தாலும் ஏறி மிதிக்கின்ற செயலே நீதியாகவும் அறமாகவும் தெரிகின்ற போது, எங்கள் இனம் எங்கே மீளப் போகிறது.
சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தால் அது ஒரு வரலாறாகி இருக்கும்.
ஆனால் நடந்தது என்ன? நீங்கள் எதிர்க் கட்சித் தலைவராக இருக்க முடியாது என்று கூறி சபாநாயகர் துரத்துமளவுக்கு நிலைமை வந்தது என்றால், இனிமேலாவது; இனத்துக் காக ஒன்றுபடுவது எப்படி என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
Link to Source:
http://valampurii.lk/valampurii/content.php?id=18681&ctype=news
Be the first to comment