வன்னி ரிஎன்ஏ (TNA) கூட்டத்துக்கு சுமந்திரனுக்கு அனுமதி மறுப்பு/ Sumanthiran denied entry to Vanni TNA meeting

சார்ள்ஸின் கடுமையான எதிர்ப்பால் சுமந்திரன் கலந்துக் கொள்ளவிருந்த கூட்டம் இரத்து

இன்றையதினம் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை சந்திப்பதற்காக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா செல்லவிருந்தார்.

இந்த நிலையில் அவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செல்லவிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் எதிர்ப்பால் குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சுமந்திரன் இந்த கூட்டத்தில் பங்குப்பற்றினால் தான் பங்குப்பற்ற மாட்டேன் என கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பகுதிக்கான தமிழரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சுமந்திரன் முரணான கருத்தை கூறி தென்னிலங்கையில் ஒரு கருத்தையும், அதை நியாயப்படுத்துவதற்காக யாழில் ஒரு கருத்தையும் கூறுவதால் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் மக்களின் கருத்துக்களையும் விசாரித்து சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Link to Tamilwin’s Source : https://www.tamilwin.com/politics/01/248692?ref=home-feed

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.