ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இந்த எதிர்ப்பு போராட்டமானது பிரதமரின் யாழ். நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு பதாதைகளுடன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது :
“Ranil, Leave Our Tamil Homeland
ரணிலே , எங்கள் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு
We Need North-East Merged Full Pledge Federalism.
எங்களுக்கு வடகிழக்கு இணைக்கப்பட்ட முழுமையான கூட்டாட்சியே தேவை
Throw Your Ekiya Rajaya into The Dirt
உங்கள் ஏக்கிய ராஜ்யாவை குப்பையில் எறியுங்கள்”
போன்ற பல்வேறுபட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
Photos: Courtesy of TamilWin
Be the first to comment