திரு. சம்பந்ததனும் சுமந்திரனும் தமிழினத்திற்கு எதிர்ப்பான மற்றும் தமிழரை வெறுக்கும் பிராணிகள். சம்பந்தனையும் சுமந்திரனையும் தமிழர்களின் அரசியலில் இருந்து வெளியேற் ற வேண்டும்.
சிங்களவரிகளுடன் வாழ அதிர்ஷ்டசாலி என்று சிங்கள ஊடகங்களில் சுமந்திரன் தமிழர்களை அவமதிக்கப்பட்டதையும் , இனப்படுகொலை செய்து வரும் சிங்களத்தை எதிர்த்து தமிழர்கள் ஆயுதப் போராட்டம் செய்ததை எதிர்த்ததையும் , சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் “சுமந்திரனின் தனிப்படட கருத்து” என்று கூறி மழுப்புகின்றனர்.
சிங்கள ஊடகங்களுக்கு சுமந்திரன் கூறியது அவரின் தமிழ் எதிர்ப்பு மற்றும் தமிழ் வெறுப்பு உணர்ச்ச்சிகளையும் காட்டுகின்றது.
சிங்களவருடன் வாழ்வது அதிர்ஷ்டம் என்று சுமந்திரன் சொன்னபோது, அவர் தமிழர்களை தீண்டத்தகாத அல்லது மனிதாபிமானமற்ற அல்லது நாகரிகமற்ற மற்றும் அறிவற்ற இனமாக உலகத்திற்கு கூற பார்க்கிறார்.
சிங்கள இனப்படுகொலை மற்றும் தொடர்ச்சியான சிங்களவரால் தீண்டப்பட்ட இனக் கலவரங்களுக்கு எதிராக தமிழர்களை காப்பாற்ற ஆயுதம் தூக்கியது நியமானது.
இதனை கில்லரி கிளின்டன் கூட உலக சரித்திரத்தின் படி வழமையான போராட்டம் என்று கூறியிருந்தார்.
தமிழினம் தம்மை பாதுகாக்காமல் அழிவது தான் முறை என்று சுமந்திரன் நினைப்பது, தமிழனத்தின் மீது அவரது வெறுப்பு, தமிழர்களின் துன்பங்களை அவர் உணரவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஒருவேளை அவர் ஒரு தமிழர் அல்ல என்பதை உணர்த்துகிறது.
சுமந்திரனின் கூற்று அவருடைய சொந்த அறிக்கை என்றும், இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் கூறி நழுவப்பார்க்கிறது.
நிச்சயமாக, சுமந்திரன் கூற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு ஏனெனில் சுமந்திரன் கூட்டமைப்பின் உத்தயோக பூர்வமான பேச்சாளரும், சுமந்திரன் கடந்த 11 வருடங்களாக பல்வேறு அரசாங்கங்களுடனான வெளிநாட்டு உறவுகளுக்குப் பொறுப்பானவர் என்பதால், சுமந்திரனின் கூற்று, கூட்டமைப்பின் உத்தயோக பூர்வமான நிலைப்பாடாகும்.
சுமந்திரனை சர்வதேச தொடர்புகளிருந்தும், கூட்டமைப்பு பேச்சாளர் பதவியிலிருந்தும் அகற்றினால் மட்டும் தான், கூட்டமைப்பு சுமந்திரனின் கூற்று கூட்டமைப்புக்கு தொடர்பில்லை என்று கூறலாம்.
சுமந்திரனின் கொள்கையையும் சிந்தனையையும் தந்தை செல்வாவின் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை.
சம்பந்தனையும் சுமந்திரனையும் வெளியேற்ற கூட்ட்டமைப்பு தவறினால், தமிழ் மக்கள் விரைவில் அவர்களை வெளியேற்றுவர்.
Be the first to comment