Most Important Advice: Golden Advice by Mr. Pirabakaran / திரு. பிரபாகரனின் பயனுள்ள அறிவுரை

1

Click to Play Video

* Please pass this email to your friends and politicians and post your facebook.

* இந்த மின்னஞ்சலை உங்கள் நண்பர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனுப்பவும், உங்கள் பேஸ்புக் பதிவு செய்யவும்.

நாங்கள் ஒரு பரிதாபத்துக்குரியவர்களாக அலைவதை நான் எப்பொழுதுமே வரவேற்றதில்லை. ஏனெனில் பரிதாபத்துக்குரியவர்களாக அலைவதால் அனைவரின் பரிதாபத்திற்குரியவர்களாக அலைவோமே தவிரி எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் தீர்க்க போவதில்லை. எப்பொழுதும் எங்களுடைய உரிமைப்பிரச்சனைளை எங்கள் உரிமைப் போராட்டத்தின் மூலம் தான் தீர்க்க முடியும்.

நாங்கள் அடிக்க ஓடிக்கொண்டிருந்தால் எம்மை அடிப்பவர்கள் திரும்ப அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள். திரும்ப நாங்கள் அடிப்பதன் மூலம் தான் எங்களுடைய நிலையை பரிதாபத்தில் இருந்து நீக்கி எடுக்கலாம்.

இன்று இந்த உலகத்தினை பார்த்தால் தெரியும் வலியவர்கள் வாழ்வார்கள் என்ற தத்துவம் தான் உலகத்தில் உள்ளது.

இன்றும் இந்த உலகத்தில் எத்தனையே இனக்குழுக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வெளியில் தெரியவராமல் இருக்கின்றார்கள். அதற்கு காரணம் பரிதாபத்திற்குரியவர்களாக இருப்பதால் மட்டும்தான். ஆதே நேரம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுபவர்களாக இருந்தால் அவர்கள் நிச்சயம் எதிரிகளால் கூட மதிக்கப்படுவார்கள்.

எப்பவும் எதிரிகள் பலவீனமான பக்கத்தினை அழித்து பலமான பக்கத்தினையே தமக்கு சாதகமாக கொண்டுவருவார்கள். எனவே நாங்கள் எங்கள் பலவீனமான பக்கத்தினை வைத்துக்கொண்டு உலகம் எங்களை பார்த்து உலகம் எங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்று நினைப்பது தவறு.

ஏனென்றால் நாங்கள் பலவீனமாக இருந்த காலத்தில் உலகம் எங்களிடம் வரவில்லை. நாங்கள் பலமாக இருந்தபோது தான் உலகத்தின் கவனம் எமது பக்கம் திரும்பி உள்ளது. அதுவும் நாங்கள் பலமாக இருக்கும் இந்த காலப்பகுதியில் இலங்கை இரண்டாக உடைந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணத்தினிலாலேயே இந்த பிரச்சனையை தீர்த்துவிடுவதற்காகவே வருகின்றார்களே தவிர, எமது தரப்பு நிஜாம் சரி, நாங்கள் பிரிந்து செல்வது சரி என்று சொல்லிக்கொண்டு இங்கு எந்த நாடும் வரவில்லை.

இப்போது கூட இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு தான் வந்து பேசுகின்றார்களே தவிரி எங்களுடைய பரிதாபத்திற்காக யாரும் இங்கே வரவில்லை. இங்கு ஆயுதப்போராட்டத்தின் வலிமை இங்கு இல்லாமல் போய் இருந்தால் யாரும் எங்களை திரும்பியே பார்த்திருக்க மாட்டார்கள். இங்கு பிரச்சனைகள் அடக்கு முறைகளினாலேயே தீர்க்கப்பட்டிருக்கும்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
About Tamil Diaspora News.com 186 Articles

ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*