இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும், இங்கு காணொளியின் குறிப்பிடப்பட்டுள்ளதன் சுருக்கத்தினையே கீழே குறிப்பிட்டுள்ளோம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான நடராஜா காண்டீபன் அவர்கள் டான் தமிழ் ஒளிக்கு வளங்கிய செவ்வி வழங்கி இருந்தார். அதில் அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்
கடந்த கால, தற்போதைய ஆட்சியாளர்களது செயற்பாடுகளை பார்க்கும் போது எந்தொரு காலத்திலும் எமக்கான அரசியல் தீர்வோ, இனப்படுகொலைக்கான நீதியோ இந்த பாராளுமன்றம் மூலம் கிடைக்காது. அதை சர்வதேசத்திற்கு எடுத்து சென்றே நீதியை பெற முடியும், ஆனால் அதற்கு மக்களின் ஆணையை பெற்றவர்களாக செல்ல வேண்டும் அப்போதே சர்வதேசம் எங்களை ஏற்றுக்கொள்ளும். அதற்காக இந்த தேர்தலில் நிற்கின்றோம்.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் தேர்தல் நடத்துவது பற்றி கருத்து கூறும்போது, கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் கூட்டுவது சாத்தியமற்றது, கொரோன சூழ்நிலை தொடர்ந்து வருவதாலும், இயல்பான வாழ்க்கைக்குள் மக்களை கொண்டுவந்து புதிய தேர்தலுக்கு போகக் கூடிய விடையத்தை பார்க்க வேண்டும். அதை விடுத்து, இதையே ஒரு காரணமாக வைத்துக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பானது, பாராளுமன்றத்தை கூட்டவேண்டும், அவசரகால நிலைக்கு நாங்கள் ஆதரவு தருகின்றோம் என்று கூறுவதோடு எந்த சம்பளமும் வாங்க மாட்டோம், எந்த கொடுப்பனவையும் கேட்கமாட்டோம், அரசாங்கத்தை கவுக்க மாட்டோம், என்று கூறுவது மிகவும் கேவலமான விடையம், உலகில் யாரும் இப்படியான உறுதிமொழியை கொடுக்க மாட்டார்கள். இப்படியான உறுதியை கொடுக்க இவர்கள் யார், தற்போது இவர்கள் ஒரு சாதாரண மக்களே எந்த அதிகாரமும் இல்லாதவர்கள் என்று கூறினார்.
சிங்கள நாடாளுமன்ற தேர்தலை ஏற்றுக்கொண்டமைக்கான காரணம் எமது விடுதலைக்கான போராட்டம் அகிம்சை ரீதியிலும், ஆயுத போராட்டமாகவும் நடந்து முடிந்துள்ள இவ்வேளையில் எமகான நீதியை வேண்டி சர்வதேசத்திடம் செல்வதற்கும், இனப்படுகொலைக்கான நீதியை வேண்டிக்கொள்வதற்கும் நாம் மக்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது. அதற்கு இந்த சிங்கள நாடாளுமன்ற அங்கத்துவமே ஒரே வழி. அதற்காகவே இந்த தேர்தல் அரசியலில் நிற்கின்றோம். ஆனாலும் கடந்த கால தமிழ் தலைமைகள் இதனை செய்யாது சிங்கள அரசுடன் இணக்க அரசியல் செய்வதாக கூறிக் கொண்டு சர்வதேசத்திடம் இருந்து இலங்கையை பாதுகாத்ததையே செய்தார்கள் என்று குறிப்பட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தால் மட்டுமே, அச்சட்டம் வடகிழக்கை கட்டுப்படுத்தாது. ஆனாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அதை செய்ய தவறியது
மக்களுக்கான ஒரு அரசியலை முன்னெடுப்பதற்கான சூழ்நிலையை இந்த கொரோன ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்னெடுக்க தவறிய இந்த கூட்டமைப்பு மக்களால் தற்போது முற்றுமுழுதாக புறக்கணிக்கும் நிலைக்கு வந்து விட்டது, எனவே இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு நல் தீர்ப்பை கொடுக்கும் அதற்காகவே நாங்களும் மக்களும் இந்த தேர்தலுக்காக காத்திருக்கின்றோம்.
எமக்கான அங்கீகாரம் மக்கள் கொடுத்தால் மக்கள் ஆணையை சர்வதேச ரீதியாக எடுத்து செல்ல எங்களால் முடியும். அதனை நிரூபிப்போம் என்று கூறினார்.
Be the first to comment