ஈழம் பிரிவதே பொருத்தம்: வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்

Source Pathivu:https://www.pathivu.com/2020/03/missing_27.html

Rajkumar3

நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மிருசுவில் கொலையாளி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் இலங்கையிலிருந்து பொறுப்புணர்வையும் நீதியையும் எதிர்பார்க்கக்கூடாது என்பதும் உறுதியாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு பொதுமக்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சிப்பாயை இலங்கை ஜனாதிபதி வியாழக்கிழமை விடுவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பிரிந்து போவது தான் ஒரே தீர்வு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியதன் விளைவு தான் இது எனவும் அந்த அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

கொன்றவனையே நீதிபதி ஆக்கும் உள்ளக விசாரணை வேண்டாம். கோழிகளுக்கு ஓநாய் பாதுகாவலன் என்று நம்பத் தமிழ் மக்கள் இனியும் தயாரில்லை. தமிழ் இனப் படுகொலையாளிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கேட்க ஐ.நாவிடம் சர்வசன வாக்கெடுப்பை கோரவேண்டும்.

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இயங்கவில்லை. அதற்குள் ஆட்சியாளர்களினதும், இராணுவத்தினரதும் தலையீடுகள் உண்டு. நாடு இராணுவத் தனத்தை நோக்கிப் போகிறது. தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள் சேர்ந்து வாழ முடியாது எனவும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Useful Link: https://menafn.com/1098099452/Tamil-Parents-of-Disappeared-Forum-Writes-to-UNHRC-about-Need-for-ICC-Referendum-and-UN-Peace-Keeping-Force

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.