ஆகஸ்ட் 5 இல் துரதிர்ஷ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு பின்வரும் பத்து துயரங்கள் ஏற்படும்
1. வடகிழக்கு பிரிக்கப்படும். கிழக்கு மாகாண சபை தமிழர்களால் ஆளப்படாது.
2. சிங்கள ஒற்றையாட்சி “ஏக்கிய ராஜ்ய” ஒரு தீர்வாக இருக்கும், அதேசமயம் 70% சிங்களவர்களும் தமிழர்களின் தலைவிதியை கடந்த 70 ஆண்டுகளைப் போலவே தீர்மானிப்பார்கள்.
3. தமிழ் தேசியவாத நீக்கம் தொடரும், எனவே பெரும்பாலான தமிழர்கள் ஒற்றுமை இன்றி பிளவுபடுவார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று வர்ணிக்கப்படுவார்கள், எனவே தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று பட்டியலிடப்படுவார்கள்.
4. நெடுங்கேணி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற சிங்கள குடியேற்றம் துரிதப்படுத்தப்படும்.
5. சைவமும் கிறிஸ்தவமும் தமிழ் தேசத்தில் புத்த மதத்தை விட தாழ்ந்த மதங்களாக ஆக்கப்படும். வடகிழக்கில், நல்லூர், திருக்கோணேஸ்வரம், திருக்கேஸ்வரம், மடு மாதா மற்றும் பல ஆலயங்கள் விகாரைகளாக மாறும். மேலும் பல புத்த சிலைகள், விகாரைகள் மற்றும் சிங்கள சின்னங்கள் வடகிழக்கில் தோன்றும்.
6. சர்வதேச விசாரணை நடக்காது, குற்றவாளிகள் பெல்ஜியத்தின் ஹெய்கில் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள். நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வழங்கப்படாது. தமிழர்கள் மீதான அடக்குமுறை தொடரும். காணாமல் போன தமிழர்கள் மற்றும் அரசியல் கைதிகள் பற்றி எங்கு என்று தெரியாது போய்விடும்.
7. யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் கூறியது போல், தமிழ்த் மக்களைக் காப்பாற்ற TNA ஆனது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தலையிட அனுமதிக்காது.
8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்பானது 13 ஆவது திருத்தத்தை அழித்து இந்தியாவை தமிழர்களிடம் இருந்து துண்டிக்கும். தமிழர்களை அடிமைகளாக மேலும் மாற்றும். தமிழர்களின் ஆதரவு இல்லாமல் புதிய அரசியலமைப்பு அமுல்ப்படுத்தப்படும்.
9. ஸ்ரீ லங்கா இராணுவம் தமிழர்களின் நிலத்தில் தங்கியிருக்கும்; தமிழர்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் பண்ணைகள் இராணுவத்தால் தொடர்ந்து அபகரிக்கப்படும். எங்கள் தாயக்கத்திற்கு அதிக போதை வஸ்துக்கள் கொண்டுவரப்படும். பல தமிழ் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவார்கள்.
10. பயங்கரவாதச் சட்டத்தின் பெயரில், மேலும் முன்னாள் காயமுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்ப்பவர்கள் எல்லோரும் , சுமந்திரனின் பாதுகாப்பு என்ற பெயரில் கைது செய்யப்படுவார்கள்.
நன்றி
புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்திகள்
01.08.2020
Be the first to comment