விடுதலைப்புலிகள் பற்றியும் மற்றும் அவர்களது ஒத்துழைப்பு பற்றியும் மாவை பேசுவது ஒரு தேர்தல் அரசியல் வித்தை.

மிக வீரம் கொண்ட விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை மிக மோசமாக அவமதித்த சுமந்திரனும் சம்பந்தனும் உள்ளடக்கிய கட்சி, முன்னாள் விடுதலைப்புலிகளுடன் பேசுவதோ அல்லது ஒற்றுமை பற்றி பேசவோ கூடாது.

விடுதலைப்புலிகள் பற்றியும் மற்றும் அவர்களது ஒத்துழைப்பு பற்றியும் மாவை பேசுவது ஒரு தேர்தல் அரசியல் வித்தை.

சமீபத்தில் திரு. மாவை பின்வரும் அறிக்கையை விட்டிருந்தார்விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.”

மாவை அவர்கள் ஒத்துழைப்பைக் கேட்பது பரிதாபகரமானது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் விடையத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் சுமந்திரனின் பேச்சைக் கேட்காததால், த.அ.கட்சி விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து TNA க்குள் ஒற்றுமையை உடைத்தது.

சிறிதரன், சிவமோகன் ஆகிய இருவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இன் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் த.அ.கட்சி தலைவராக மாவை அந்த இரண்டு எம்.பி.க்களையும் தனது கட்சியில் சேருமாறு கேட்டுக்கொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப் என்பது TNA வின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஈ.பி.ஆர்.எல்.எஃப் உடைக்க எடுத்த ஒரு சதி. இது வெற்றி பெற்றது.

அனந்தி, சிவகரன், ஆகியோர் சிறிசேனாவுக்கு ஆதரவாக TNA ஆதரவு நிலைப்பாடு எடுத்தமைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த போது, தமிழரசுக் கட்சி தங்கள் கட்சியிலிருந்து அவர்களை நீக்கியது.

ஜனநாயகத்தில், கட்சி ஒற்றுமையை பேணி வைத்திருக்க த.அ.கட்சி ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும்.

த.அ.கட்சி இலிருந்து நீக்கப்பட்ட அல்லது பிற கட்சிகளிருந்து வரவேற்கப்பட்ட பல வடக்கு மாகாண உறுப்பினர்களை நாம் பட்டியலிடலாம். இது ஒரு ஒற்றுமை அல்ல, சிங்களத்தை பாதுகாத்து, உயர் சிங்கள இடங்களிருந்து பணம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை பெற சொந்த நலனை மேம்படுத்துவதற்கான சதி.

மிக வீரம் கொண்ட விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை மிக மோசமாக அவமதித்த சுமந்திரனும் சம்பந்தனும் உள்ளடக்கிய கட்சி, முன்னாள் விடுதலைப்புலிகளுடன் பேசுவதோ அல்லது ஒற்றுமை பற்றி பேசவோ கூடாது.

ஒற்றுமை மற்றும் விடுதலைப்புலிகளை அழைப்பதென்று தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். இது ஒரு தேர்தல் அரசியல் வித்தை.

எம் தமிழ் மக்களே!!!
இந்த நேரத்தில் TNA எம்பி க்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.