விக்டர் ராஜலிங்கம் : கம்போடியா உலகத்தமிழர் மகாநாட்டில் இலங்கை அமைச்சரின் விசுவாசம்

Screen Shot 2018-06-02 at 9.13.19 PM

உலகத்தமிழர்களின் ஒன்றுகூடல் மகாநாடு கம்போடியா நாட்டில் இம்மாதம் 19ம் 20ம் திகதிகளில் நடைபெற்றது. இதற்கு தமிழர்கள் 60 நாடுகளில் இருந்து வருகை தந்து சிறப்பித்தனர். இந்த மகாநாட்டில் தமிழ் வரலாற்று அறிவியல் சம்பந்தமான விடையங்குளுடன் தமிழ் கலை, கலாச்சாரம் , பாரம்பரியம் ,
வாணிபம் போன்ற விடயங்களை ஆய்வு செய்தார்கள் . அதனாலே அரசியல் விடயங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இந்த மகாநாட்டை பற்றிய காணொளிகள் நேற்றைய தினம் அனுப்பியிருந்தேன் .

பார்க்காதவர்கள் கீழ்காணும் இணையத்தில் பார்க்கலாம். இந்த மகாநாட்டை தமிழ் நாட்டு தமிழர்களுடன் தென் கிழக்காசியாவில் வாழும் தமிழர் பலரும் சேர்ந்து நடத்தியிருந்தனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் .

இந்த மகாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது 33 பேர் கொண்ட குழுவுடன் வருகை தந்து ஒரு சிறப்புரையும் ஆற்றினார். (ஈழத்தமிழர்கள் என்று சொல்லும்படியாக பேச்சாளர்களையோ அல்லது பார்வையாளர்களையோ காணமுடியவில்லை. அதனால்தான் என்னவோ முள்ளியவாய்க்கால் சம்பவங்கள் எதுவும் நினைவுகூ றப்படவில்லை.

இனி என் ஆதங்கத்துக்கு வருவோம்.

இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆற்றிய சிற்றுரையில் கீழ்காணும் விடயங்களை பேசியிருந்தார் . ( கீழோயுள்ள இணைப்பில் 9 இலிருந்து மூன்று நிமிடங்கள் பாருங்கள் )

” உலகித்தில் இன்று தமிழர்கள் 132 நாடுகளில் வாழ்கிறார்கள். இதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் (இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக ) புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் என்பதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் வாழ்வது சாதாரண வாழ்க்கையல்ல ! நல்ல வாழ்க்கை !!. இதை ஏற்படுத்தி கொடுத்தது ( யுத்தத்தை ) இலங்கை என்பதில் பெருமை கொள்கிறேன்.”

இலங்கையின் இந்த புகழ்பாடத்தான் 33 பேருடன் ( சுற்றுலா ) கம்போடியா வந்தீர்களா ?

இலங்கைத்தமிழர்கள் இந்தியாவில் அகதி முகாம்களில் வாழும் ” பெருவாழ்வை ” அறியவில்லையா ?

இலங்கையில் இருந்து கொடுமைகளுக்கு தப்பியோடிய தமிழர்கள் மலேஷியா,தாய்லாந்து அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் படும் ” பெருவாழ்வை ” அறியவில்லையா ?

பாவம் நீங்கள் ! உங்களுக்கு தந்த பணியை செவ்வனே செய்துள்ளீர்கள்.!
நீங்கள் பார்க்கும் மந்திரி பதவிக்கு நன்றிக்கடன் செய்துள்ளீர்கள் !!
இனியாவது , வெளிநாடுகள் போகும்போது ஈழத்தமிழரின் சரித்திரத்தை
அறிந்துகொண்டு செல்லுங்கள். எங்களுக்கு நன்மை செய்யா விட்டாலும்
பறவாயில்லை . தீமையாவது செய்யாது இருங்கள். !!!!

வேதனையுடன்

விக்டர் ராஜலிங்கம்

(Please take the cursor to 9.1 to listen to Mr. Radhakrishnan’s speech.)

For more information on this conference, please go to the
following the link and click related topics on that page.

Please take the cursor to 9.1 to listen to Mr. Radhakrishnan’s speech.)

For more information on this conference, please go to the
following the link and click related topics on that page.

About Tamil Diaspora News.com 524 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.