வலம்புரி: யாழ்.பல்கலைக்கழகத்தை தாரைவார்த்து விடாதீர்கள்

யாழ்.பல்கலைக்கழகத்தை தாரைவார்த்து விடாதீர்கள்
2019-06-19 12:51:17

Source Link: http://www.valampurii.lk/valampurii/content.php?id=18803&ctype=news

எம் தமிழினத்தின் பலயீனங்கள் பற்றி நாம் சிந்திக்காதவரை எமக்கு விமோசனம் கிடைக்கப் போவதில்லை.

மற்றவர்களைக் குறைஅளக்க முன்பு நாம் எம் இனத்தைப் பற்றிச் சிந்தித்தோமா? என் பதுதான் முதற் கேள்வி.

இந்தக் கேள்விக்கான பதில் வெறும் மெளனமாகவே இருக்க முடியும்.

தமிழினத்தை நசுக்குவதும் அடக்குவதும் எங்ஙனம் என்பது பற்றியே ஏனைய இனங்கள் சிந்திக்கின்றன.

முப்பது ஆண்டு காலயுத்தத்தில் தமிழினம் சின்னாபின்னப்பட்டு சிதறுண்டு போக, அந்தக் கால இடைவெளிக்குள் தமிழர்களின் நிலத்தை, அவர்களின் வாழ்விடத்தைக் கபளீகரம் செய் கின்ற சதிவேலையில் ஏனைய இனங்கள் ஈடுபட்டன.

எங்கள் கெடு காலமும் சில நாடுகளின் சதித்தனமும் சேர்ந்து தமிழர்களின் மண் மீட்புப் போராட்டம் தோற்கடிக்கப்பட, யாருமற்ற அநாதையாய் தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்கின்ற பரிதாபத்துக்கு ஆளாகினர்.

கிழக்கில் தமிழர்களின் மண் பறிபோகிறது. வன்னியில் சட்டவிரோதச் சிங்களக் குடியேற் றம் நடந்தாகிறது.

எஞ்சி இருக்கின்ற விளைநிலங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் பறிபோய்விட, இப்போது தமிழர் தாயகம் குறுகிக் கொள்கிறது.

இந்தக் கொடுமையில் இருந்து மீள முடியவில்லையே என்ற ஏக்கம் மிகுந்திருக்க; இப் போது வட மாகாணத்தில் இருக்கக்கூடிய அரச நிறுவனங்களில் சிங்கள முஸ்லிம் தரப் புக்கு நியமனம் வழங்கி அவர்களை வடக்குக்கு அனுப்பி வைக்கின்ற நீசத்தனம் நடந்த வண்ணமுள்ளன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் வேலையின்றி வெறுப்படைந்திரு க்க, இங்கிருக்கின்ற அரச அமைப்புகளில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம் தரப்புக்குமே வேலைவாய்ப்பு என்றால் தமிழ் இளைஞர் யுவதிகள் என்னதான் செய்ய முடியும்.

இத்தகைய கொடுமைத்தனங்கள் கண்டும் நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளன மாகவே இருக்கின்றனர்.

சிலவேளைகளில் வடபகுதியில் நடக்கின்ற நியமனங்கள் கூட இவர்களுக்குத் தெரியுமா? என்று ஐயுற வேண்டியுள்ளது.

ஆம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கென தற்போது நடைபெறவுள்ள கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் தரப்பினர் என்ற தகவல் எங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் பறிபோகிறது என்பதைத் தான் கட்டியம் சொல்லி நிற்கிறது.

விஞ்ஞான பீடத்தில், சித்த மருத்துவத்தில், சட்டத்துறையில் என எல்லாவற்றிலும் தமிழ் மாணவர்கள் குறைந்து, ஏனைய இனத்தவர் கள் அதிகரித்து நிற்க, தற்போது யாழ். பல் கலைக்கழக கல்விசாரா உத்தியோகத்தர்களையும் சிங்கள, முஸ்லிம் தரப்பாக்கி விடு கின்ற சதித்திட்டம் நடக்கிறது.

இது கண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் மெளனம் காத்தால் அது தமிழினத் துக்குச் செய்கின்ற மிகப் பெரும் துரோகத்தனமாகும்.

எனவே அரசியல் நியமனங்களாயினும் நடப்பது நம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்பதால் எங்கள் எதிர்ப்பு வலுவாக இருக்க வேண்டும்.

About Tamil Diaspora News.com 461 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.