முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன.
இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த உருவப் பொம்மைகள் எரியூட்டப்பட்டன.
சுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமாராட்சி முள்ளியில், வல்லிபுரக் கோவிலுக்கு அருகே சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது.
அண்மைக்காலமாக சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றோர் பொது வெளிகளில் தெரிவித்துவருகின்ற பல்வேறு கருத்துக்கள் யாழ் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்வலைகளை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Be the first to comment