ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா?
5 வருடங்களுக்கு முன்னர் சுமந்திரனின் “நல்லாட்சி” என்பதை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, சீனாவின் 5 ஜி கோபுரத்தை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
சீன 5 ஜி கோபுரத்தை நிறுவ சுமந்திரன் நீதிமன்றம் சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சுமந்திரன் மற்றும் அவரது நண்பரான யாழ்ப்பாண மேயர் ஆனால்ட் இருவரும் சீனரின் 5 ஜி கோபுரத்திற்காக இணைந்து பணியாற்றினர்.
அரியாலையில் நல்லூர் மேயர் (முன்னை நாள்) ஆனால்ட் உதவியுடன் ரணில் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (சுமந்திரன்) ஆகியோரால் “கடல் அட்டைப் பண்ணை” ஒப்புதல் கொடுக்கப்பட்டது என்பதை இப்போது நாம் அறிவோம்.
கடல் அட்டை பண்ணை 5 வருடத்திற்கு முன்னர் தொடங்கியது என்பது சீனரின் நடவடைக்கையிலிருந்து தெரிகிறது.
சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழரின் சுதந்திரத்திற்கான எந்த மூலோபாயமும் இல்லை. அவர்களின் மூலோபாயம் பணம் சம்பாதிப்பது மட்டுமே.
இந்தியா மற்றும் தமிழர்களுக்கு எதிரான சீனரின் 5 ஜி கோபுரத்தின் மீது சக்திவாய்ந்த கமராக்கள் மூலம் உளவு பார்த்ததற்காக சீனர்களுக்கு உதவி செய்கின்றார்கள். இதன் மூலம் சுமந்திரனும் கூட்டமைப்பும் பணம் சம்பாதித்திருக்கலாம் என்று நாங்கள் கூற எதிர்பார்க்கின்றோம்.
இது தமிழர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்த நம்பிக்கைத் துரோகம் ஆகும்.
இந்த ஊழல் நிறைந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களை தமிழர்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்கு இது மற்றொரு காரணம்.
இது தமிழ் வாக்காளர்களின் மற்றொரு சாபமாகும்.
நன்றி,
புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்திகள்