சுமந்திரன், சமீபத்தில் தமிழ் செய்தித்தாளான “தினக்குரல்” க்கு யு.என்.எச்.ஆர்.சி போர்க்குற்றத் தீர்மானத்தை என்ன செய்வது என்று யோசித்து வருவதாகவும், தனது சொந்த (ரணில் காலத்தில்) அரசியலமைப்பைக் (எக்கிய ரஜ்ஜா) கொண்டுவருவதற்காக ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இங்கே இணைப்பு:https://thinakkural.lk/article/89772
சுமந்திரன் கடந்த 10 ஆண்டுகளில் தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக பணியாற்றினார். சுமந்திரன் ஒரு பொய்யர், அவரை நம்ப முடியாது. அவர் சிங்கள முகவராக பணியாற்றி வருகிறார்.
எனவே, சுமந்திரனை தமிழர்களின் அரசியலில் இருந்து நீக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் மற்றும் இலங்கை அரசியலமைப்பில் சுமந்திரன் ஈடுபாட்டை நிறுத்தாவிட்டால், மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்.
ஜெனிவா தீர்மானம் மற்றும் ராஜபக்ஸாவின் இலங்கையின் அரசியலமைப்பு தொடர்பில் ஈடுபடுபடுவதில் இருந்து சுமந்திரனை மாவை சேனாதிராஜா அவர்கள் நீக்க வேண்டும்.
மாவை சேனாதிராஜா வட மாகாண சபையின் அடுத்த முதல்வராக வர விரும்புகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். சுமந்திரனை தமிழ் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அகற்றத் தவறினால், மாகாண சபையைக் கைப்பற்ற மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசுக்கட்சியின் காணும் கனவு புலம்பெயர்ந்த தமிழர்களால் மற்றும் ஈழத்தமிழர்களால் தடுக்கப்படும்.
சுமந்திரன் பின்வரும் காரணிகளால் தமிழர்களுக்குரியவர் அல்ல என்பது தெழிவாகின்றது
1. | இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப தமிழர்களுக்கு வழி இல்லை என்று சுமந்திரன் பொய்யாக எங்களிடம் கூறினார். |
2. | இனப்படுகொலை வழக்கை உள்ளூர் வழக்காய் மாற்றியவர். |
3. | சமஸ்டிக்கு சுமந்திரனின் வரையறை “ஏக்கியா ராஜ்ய”. இது ஒரு ஒற்றையாட்சி. சமஸ்டி என்பது “ஏக்கியா ராஜ்ய” இல் மறைந்திருப்பதாக சுமந்திரன் எங்களிடம் கூறியுள்ளார். இது சுமந்திரனின் ஏமாற்றும் அறிக்கை. |
4. | வடகிழக்கு இணைப்பை நிராகரித்தவர் சுமந்திரன். |
5. | சுமந்திரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்வதற்கு இனவழிப்பில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையின் (STF)பாதுகாப்பே தேவையாக உள்ளது. |
6. | சுமந்திரனின் பொய்யான குற்றச்சாட்டினால் கைசெய்பட்ட சுமார் 25 முன்னாள் போராளிகள் இன்று சிறையில் உள்ளார்கள். அவர்களது குடும்பங்கள் (சுமார் 200 தமிழர்கள்) இன்று கடுiமான நெருக்கடியில் உள்ளார்கள். |
7. | சுமந்திரன் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அதிஸ்டம் என்று கூறியவர். இவர்; தமிழர்களுடன் சேர்ந்து வாழ்வதை விரும்பாதவர். |
8. | சுமந்திரன் இலங்கையில் இந்து சமயத்தையும் கிறிஸ்த சமயத்தையும் புறக்கணித்து பௌத்தமே முதன்மையான சமயம் என்று வாதாடியவர். |
அரசியலமைப்பு தொடர்பிலும், வெளிநாட்டு இராஜதந்திரிகள் தொடர்பிலும் சுமந்திரன் ஈடுபடுவது மற்றும் மஹிந்தாவுடன் தொடர்பை சுமந்திரன் பேணுவதை மாவை சேனாதிராஜா தடுக்க மறுத்தால், வர இருக்கும் மாகாண தேர்தலில் மாவை சேனாதிராஜாவை தோற்கடிக்க தமிழர்கள் கடுமையாக உழைப்பார்கள்.
சுமந்திரனின் தமிழ்த் தேசியத்திற்கெதிரான செயற்பாட்டினால் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கணிசமாக தோற்கடித்துக் காட்டியுள்ளோம்.
தமிழ்த் தேசியத்திற்காக நின்ற விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரின் அரசியல் கட்சிகளின் வெற்றிக்காக உழைத்தோம் என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்
Be the first to comment