|
“மறப்போம் மன்னிப்போம்” , அது தமிழ் கூட்டமைப்பு கொள்கையா?ரணில் யுத்த போர்க்குற்றத்தை பற்றி “மறப்போம் மன்னிப்போம்” என்று ஸ்ரீதரனின் கிளிநொச்சியில் கூறினார். ஆனால் அதனை ஒரு தமிழ் கூட்டணியினரும் மறுக்கவில்லை. ரணில் பேச்சு சுமந்திரன் எழுதியது. ரணில் பாவித்த தர்க்கம், இது ஒரு பொதுவான சுமந்திரன் பாணியாகும். ரணிலின் தர்க்கம் “இவை அனைத்துமே 2015 ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டன.” தமிழ் கூட்டமைப்பு கட் சி பதிவுகளை நிராகரிக்க சுமந்திரன் பாவித்த தர்க்கமும் , திஸ்ஸநாயக்கவின் தோற்ற வழக்கில் பாவித்த தர்க்கமும் ஒரே மாதிரி. இது ஒரு பொதுவான சுமந்திரன் நியாயத்தைத் தவிர்க்கும் தர்க்கமாகும் (It is a typical Sumanthiran’s evading logic.) சுமந்திரன் மூலம் தமிழர் இழந்த விஷயங்களை பாருங்கள், ஸ்ரீலங்கா யுத்தக் குற்றங்கள் மட்டுமே தமிழரின் துரும்பு. இப்போது திரு. சுமந்திரன் அதையம் பறிப்பதற்கு ரணில் மூலம் “மறப்போம் மன்னிப்போம்” என்று ஒரு அறிமுக அறிக்கை விட்டுள்ளார். சுமந்திரனுக்காக சோதனை செய்ய முன்னதாக ரணில் முன்வைத்தார். ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) அங்கத்துவ அட்டையை காவித்திரியும் யூ.என்.பி. உறுப்பினர் என சுமந்திரன் எங்களுக்குத் முழுமையாக கூறிவிட்டார் இன்று. யூ.என்.பி. சுமந்திரன் தமிழ் கூட்டமைப்பில் ஊடுருவி அவரது தலைவர் ரணிலின் கோரிக்கையை பூர்த்தி செய்வததே இந்த சுமந்திரனின் வேலை என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்குள், சுமந்திரன் காலிக்கு சென்று சிங்கள மொழியில் இந்த வார்த்தையை “மறப்போம் மன்னிப்போம்” என்பதை பயன்படுத்துவார். ஆனால் ஏன் சிறிதரன் அல்லது மற்ற தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குறிப்பாக தமிழரசு தலைவர் மாவை ரணிலின் பேச்சை கேட்டு அமைதியாக இருந்தார்கள் . ரணிலின் உரை “மறப்போம் மன்னிப்போம்”மை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டதா? என்பது எங்களுடைய கேள்வி. ஸ்ரீலங்கா போர் குற்றங்களின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) குற்றம் என்று தீர்ப்பு வந்தால் சிங்கள ஸ்ரீலங்காவுக்கு பின்வருபவை நடை பெறக்கூடியது :
சிங்களத் தலைவர்கள் போர்க்குற்றங்களைத் தடுக்க அரசியல் தீர்வு உட்பட பலவற்றை தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வருவாரக்ள். 70 வருடம் போதும். இனி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னிலையில் அரசியல் பிரிவினை பெற தமிழர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒப்பந்தத்தை கையிட்டு ஏற்படுத்துவோம். ரணில் மற்றும் சுமந்திரன் ஸ்ரீலங்காவில் எதிர்காலத்தில் மேலே கூறப்பட்ட அழிவை நிறுத்த விரும்புகிறார்கள். எனவே தமிழர்கள் துரும்பான “போர் குற்றத்தை” கை விடக்கூடாது. |
Be the first to comment