“மறக்கோம் மன்னிக்கோம்” என்பது கிழக்கு திமோர், போஸ்னியா நாடுகளின் கோற்பாட்டின்படி சரியான கொள்கை

1
“மறக்கோம் மன்னிக்கோம்” என்பது கிழக்கு திமோர், போஸ்னியா நாடுகளின் கோற்பாட்டின்படி சரியான கொள்கை

ஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சிறிலங்கா போர்க்குற்ற விசாரணை தேவை?

1950 களில், தொடர்ந்து தமிழர்களை சிங்களவர்கள் தொடர்ந்து தாக்கினார்கள். இதனை நிறுத்துவதற்கு போர்க்குற்ற விசாரணையும் அதற்க்கான தண்டனையும் தேவை.

1958 முதல், தமிழர்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர், கொள்ளையடிக்கப்பட்டனர் , கற்பழிக்கப்பட்டனர். மேலும் சிங்களவர்கள் தொடர்ந்தும் எங்கள் நிலங்களை பலவந்தமாக எடுத்துக் கொண்டனர். இந்த குறிப்பிட்ட சிங்கள இனக்குழுவின் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழ் படுகொலைகள் ஒவ்வொரு தசாப்தத்திலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது. 2009 ல், அவர்கள் “மெகா மனிதாபிமான மீட்பு” என்ற பெயரில் 146,000 தமிழர்களை கொன்றனர்.

தமிழர்களுக்கு எதிரான அவர்களின் குற்றங்களுக்கு சிங்களவர்கள் தண்டிக்கப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மூலம் இந்த சிங்கள ஒடுக்குமுறைகளை தண்டிப்பதற்கான ஒரு வாய்ப்பு. கட்டளைத் தளபதிகள், ஜனாதிபதி, பாதுகாப்பு மந்திரி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகிய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் தொடர்ந்து சிங்கள ஸ்ரீலங்காவில் வாழ நேர்ப்பட்டால் இது எதிர்காலத்தில் சிங்களத் தாக்குதல்களையும் அவர்களின் அடக்குமுறையையும் தடுத்துவிடும்.

நாம் அவர்களுக்கு மன்னிப்பு கொடுக்க கூடாது என்பதற்க்கு மேல் தந்த காரணங்களே முக்கியம் .

கிழக்கு திமோரில் என்ன நடந்தது?

தமிழர்களைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு திமோர் மக்கள், சிங்கள அடக்குமுறையாளரைப் போலான இந்தோனேசியர்களால் ஒடுக்கப்பட்டவர்கள். கிழக்கு திமோர் மக்கள் “மறப்போம் மன்னிப்போம்” என் கூறவில்லை. சுதந்திரத்தின் இறுதி தீர்வுக்காக அவர்கள் காத்திருந்தனர்.

கிழக்கு திமோர் மக்கள் இந்தோனேசியர்களிடமிருந்து சுதந்திரத்தை அமெரிக்காவின் உதவியுடன் பெற்றனர். இதனால் கிழக்கு தீமோரியர்கள் இந்தோனேசியர்களுடன் வாழ வேண்டிய அவசியமில்லை என்று தெரிந்து கொண்டார்கள்.

சுதந்திரத்தின் பின் கூட, கிழக்கு திமோர் மக்கள் “மறப்போம் மன்னிப்போம்” என்று கூறவில்லை, ஆனால் போர்க் குற்றங்களைத் தண்டிப்புக்கான முயற்சியை தொடரவில்லை. அவர்கள் கொடுத்த காரணம், தெற்காசிய சூழலில் நல்ல அண்டை நாடாக இருக்க விரும்பி போர்க் குற்றங்களைத் தண்டிப்புக்கான முயற்சியை கைவிட்டார்கள்.

போஸ்னியாவில் என்ன நடந்தது?

சிங்கள அடக்குமுறையாளரைப் போலான செர்பியர்கள், தமிழர்கள் போன்ற ஒடுக்கப்பட்டவர்கள் போஸ்னியர்கள். அவர்கள் இறுதி தீர்வுக்காக காத்திருந்தனர். தீர்வு அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட கூட்டாட்சி அமைப்பாக இருந்தது.

போஸ்னியர்கள் கூட்டாட்சி அமைப்பின்கீழ் சேர்பியர்களுடன் வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டமையால், பொஸ்னியர்கள் செர்பியர்களை தங்களுக்கு செய்த குற்றங்களுக்காக தண்டிக்க வேண்டும் என பிடிபவாதமாக இருந்தார்கள். ஏனென்றால், செர்பியர்களின் எதிர்காலத்தில் அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும் என்பதே.

தீர்ப்பாயம் ஊடாக சேர்பியரின் போர் குற்றங்களை விசாரிக்க முயன்று, தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு போஸ்னியாருக்கு நீதி வழங்கப்பட்டது.

இப்போது போஸ்னியாவில் புதிய கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ், தீர்ப்பாயம் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட செர்பியர்கள், போஸ்னியரை தாக்குவதில்லை.

ஏன் ரணில் “மன்னிப்போம் மறப்போம்” என்பதை கொண்டுவந்தார்?

ஐ.தே.க. அங்கத்தவர் சுமந்திரன் நீண்ட காலத்திற்கு முன்னர் “மன்னிப்போம் மறப்போம்” என்பதை தமிழரசு எம் பி க்களுக்கு கூறியிருந்தார். இதனை ரணில் கூறும் போது எல்லா எம் பிக்களும் அமைதியாக இருந்தார்கள்.

சிறிதரன் அல்லது மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் அவர்களிடம் “இந்த கருத்தை நாம் மரியாதையுடன் நிராகரிக்கிறோம்” என்று சொல்லியிருக்கலாம், ஆனால் அவர்கள் மௌனத்தால் அவர்கள் மன்னிக்கத் தயாராக உள்ளனர் என்று உலகிற்கு காட்டினார்கள்.

அமைதிக்கு காரணம்: சிறிதரன் ஒருவிதமான நாகரீகத்தை தக்க வைத்துக் கொண்டது என்று ஒரு போலி காரணத்தினை கொடுத்தார்.

மற்றொரு இரண்டு கட்சி தலைவர்கள் நிபந்தனையுடன் மன்னிப்போம் என்று கூறினார்கள்.

இது தவறு. இது அவர்களின் பலவீன அரசியல் ஞானம் மற்றும் தூர நோக்கற்றவர்கள் என்பதை காட்டுகின்றது.

முழு நிகழ்ச்சியையும் பார்த்தால் , இரண்டு விஷயங்கள் நடந்து முடிந்துள்ளது.

முதலாவது, எமது பார்வையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து மன்னிப்போம் என்று மாற்றியது.

இரண்டாவதாக, இந்த தமிழ் அரசியல்வாதிகள் போர் குற்றவாளிகளை எவ்வாறாயினும் மன்னிக்கத் தயாராக உள்ளனர் என்பது .

இது 30/1 தீர்மானத்தை தள்ளுபடி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்க இலங்கைக்கு ஒரு நல்ல பச்சை கொடி காண்பித்ததாக அமைந்துவிட்டது.

About Tamil Diaspora News.com 524 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.