புலி வீரர்கள் பரலோகத்திலிருந்து என்ன இப்போது சொல்லுவார்கள் ? குறிப்பு :அமெரிக்காவில் , செனட்டர் மெக்கெய்ன் (Sen. McCain)வியட்நாம் போரின்போது போர் கைதி ஆனார். மெக்கெய்ன் போர்க் கைதி என்பதால், ஜனாதிபதி (Donald Trump) அவரை அவமானப்படுத்தினார். தற்போது செனட்டர் மெக்கெயின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். இதனால் தனது இறுதிச் சடங்கை ஏற்பாடுசெய்து கொண்டிருக்கின்றார். ஆனால் தனது இறுதிச் சடங்கில் டிரம்ப் கலந்து கொள்வதை மெக்கெயின் விரும்பவில்லை. ஏனெனில் தனது நாட்டுக்கான சேவையை டிரம்ப் அவமதித்தவர் என்பதால். இதே போலத்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள நிகழ்ச்சியுடன் உடன் இணைந்து செல்லும் தமிழர்களுக்கு கூறுவார்கள். முதலில் புலி வீரர்கள் எப்படி பட்டவர்களை முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலிக்கு வர வேண்டாம் என்பார்கள் என்றால்,
ஆகியோரை முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலிக்கு புலி வீரர்கள் வர வேண்டாம் என்பார்கள். அமெரிக்காவில் போரில் இறந்த இராணுவத்திற்கான நினைவுச் சேவை அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் தான் நடை பெறும். எனவே, தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண சபை தான் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு சேவையை செய்ய வேண்டும். பலர் பல்கலைக் கழகங்களில் இருந்தபோது, பல்கலைக்கழக நுழைவுக்கான தர படுத்தலுக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டக்காரராக புரட்சி செய்தார்கள், அரசியல் சிந்தனை மாற்றி வட்டுக்கோட்டை தீர்மானம், பின்னர் சுதந்திரத்திற்காக ஆயுதப் புரட்சிக்கான ஒரு சூழலை உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் நெறியை எதிர்த்துப் போகவில்லை. எனவே மாணவர்கள் புரட்சியாளர்கள் என்பது தான் சரித்திரம். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் துணிச்சல், தமிழ் தேசியம் மற்றும் விடா முயற்சியை வரவேற்கின்றோம் ஆனால் இந்த மாணவர்கள் தற்போது என்ன புரட்சி செய்ய வேண்டும் என்பது (எமது விருப்பம்) பின்வருமாறு:
இந்த பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து நமக்கு தேவை மேல் உள்ள மூன்றும் . இது விரைவில் செய்யப்பட வேண்டும். நாம் வடக்கு கிழக்கில் சிறுபான்மையினராகவும் இறுதியில் சிங்கள மக்களுக்கு எதேச்சாதிகார அடிமைகளாகவும் வாழும் காலம் வருவதற்கு முன் அரசியல் தீர்வு ஒன்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்உதவியுடன் பெற்றெடுக்க வேண்டும். உலகில்அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் தான் வலுவானது. இவர்கள் சொல்வது தான் உலகில் நடக்கின்றது, இவர்களினால் தான் எம்மக்கு ஒரு தீர்வை தர முடியும். |
Be the first to comment