புலிகள் அமைப்பை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தோற்கடிக்க நானே பெரிய பணியை செய்தேன்: மங்கள

Note: Mangala Samaraweera is the best friends of Sumanthiran, Rev. Emmanuel, Suren Surenthiran,USTPAC, CTC, ATF and GTF.
All these pro Sumanthiran Diaspora groups had meals several times with Mangal in Geneva.

விடுதலைப் புலிகள் அமைப்பை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தோற்கடிக்க தான் மிகப் பெரிய பணியை செய்ததாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பை சர்வதேச ரீதியாக தோற்கடிப்பதற்காக அந்த அமைப்புக்கு வரும் வெளிநாட்டு உதவிகளை நிறுத்துவதற்கும் அன்றைய வெளிவிவகார அமைச்சராக அதிகளவான பங்களிப்பை தானே செய்ததாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செயற்பட்ட தன்னை பயங்கரவாதிகளுக்கு தகவல் வழங்கியதாக அரசாங்க ஊடகங்கள் வெளியிட்டு வரும் அவதூறான கருத்துக்களை கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்

பகிரப்படுத்திய கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் தனது பெயர் முன்வரிசையில் இருந்தாகவும், ஈழத்திற்கு எதிராக பிரதான எதிரியாக புலிகள் அமைப்பு தன்னை அடையாளம் கண்டிருந்தது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பு கொழும்பில் குண்டுகளை வெடிக்க செய்த சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சராக அந்த நேரத்தில் தான் செய்த பணியை தற்போதுள்ள போலியான வீரர்கள் மறந்து விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் பிரபாகரன் கரும்புலிகள் தினத்தில் உரையாற்றும் போது தானே முதலாம் எதிரி என அறிவித்தார் எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.