வவுனியாவில் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களால், அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தில் படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு அனுஸ்டிக்கபட்டது.
இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு தீபம் ஏற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
அன்றய காலத்தில் காணாமல் போனவர்களின் கதைகளை தேடியறிந்து சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவர் ஊடகவியலாளர் நிமலராஜனே. அவரை படுகொலை செய்ததன் மூலம் அனைத்தையும் முடக்கி விடலாம் என்று நினைத்திருந்த அவர்களது கனவுகள் பொய்த்து போயுள்ளன.
ஏனெனில் அவரை முன்னுதாரணமாக கொண்டு நூறுநூறாக ஊடகவியலாளர்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே மெய்யாகும் என தெரிவித்தனர். அவர்களது போராட்டம் நேற்றுடன் 973 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be the first to comment