Source: Tamil win Link below.
2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் எம்மை அழைத்தனர்! மாவை சேனாதிராசா
தமிழ் தேசிய கூடட்டமைப்பு, புலிகளின் கட்சி என மாவை கூறி, சம்பந்தன் மற்றும் சுமந்திரனை பொய்யாளர்கள் என்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது எமக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செல்லக்கூடிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது
2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்த கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செல்லக்கூடிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது எமக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அச்சமயத்தில் கூட்டமைப்பின் சின்னம் தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. அனைத்து தலைவர்களின் முன்னிலையில் தான் மறைந்த அப்பாத்துரை விநாயாகமூர்த்தி தமது கட்சியின் சின்னத்தினை வழங்க மறுக்கவும் தமிழரசுக்கட்சியும் சின்னமும் முன்மொழியப்பட்டது.
மாவை இரு வழிகளையும் கொண்டிருக்க முடியாது. விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் நியாயமானது என்று அவர் கருதினால், அவர் சுமந்திரனையும் சம்பந்தனையும் தனது கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும், ஏனெனில் இவை இருவரின் எதிர்ப்பு விமர்சனம் ஆயுதப் போராட்டத்தை உள்நாட்டிலும் உலக அளவிலும் நளினம் செய்கிறார்கள் . இது தமிழரை பலவீனப்படுத்தி மற்றும் அவர்களின் பேரம் பேசும் சக்தியைக் சர்வதேச சமூகத்துடன் குறைக்கும்.
மாவையும், தமிழ் அரசு கட்சியும் அனந்தி மற்றும் சிவகரன் ஆகியோரின் சொந்த கருத்துத்தை பிடிக்காததால் தூக்கி எறிந்தவர். சுமந்திரனின் , சமீபத்தில் கொடுத்த அறிக்கை தமிழர்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். எனவே இவரின் கூற்றுக்கு யார் உடன்படுகிறார்களோ அவர்களையும் சுமந்திரன் சம்பந்தன் உள்ளிட்டோர் யாவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
Be the first to comment