தமிழ் தேசியக் கூட்டமைப்பின் லஞ்சத்தால், நான்கு லட்சம் சிங்கள் குடிகள் விரைவில் தமிழ் தாயகத்தில் – டிரம்ப்பிக்கான தமிழர்கள்
தமிழ்தேசிய கூட்டமைப்பு அண்மையில் நிறைவேற்ற உதவிய வரவு செலவு திட்டத்தை வாசிக்காமல், தமது 15 வாக்குகளால் 2/3 பெரும்பான்மையினால் நிறைவேற்றி இருந்தார்கள்.
இதில் 1000 புத்த கோவில்களுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கி வைத்துள்ளது.இக்கோவில்கள் தமிழர் தாயகத்தில் கட்டப்படவுள்ளது.
ஒவ்வொரு புத்த கோவில்களையும் பாதுகாக்க 100 இராணுவத்தினர் நிலை நிறுத்தப்படுவார்கள்.சிறிலங்காவில் ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 அங்கத்தவர்கள்.100 இராணுவத்தால் 400 சிங்களவர்கள் ஒரு புத்த கோவிலைச் சுற்றி வாழுவார்கள்.
குறிப்பு: இது பழமைவாத கணக்கீடு ஆகும். உண்மையில் கணக்கீடு நம் கணக்கீடு விட மேலதிகமாய் இருக்கும்.
இதைத்தவிர, புத்த பிக்குகள், அவர்களின் சமையல் காரர்கள். மற்றும் வேலையாளார்கள், மேலும் நீடிக்கப்பட்ட குடும்பங்கள் எல்லாமாக 400 மேலாக சிங்களவர்கள் இருப்பார்கள்.
இப்படியாக 1000 புத்த கோவிலை எடுத்தால் அங்கு 4 லட்சம் சிங்களவர்கள் வடகிழக்கிற்கு மிக விரைவில் வருவார்கள்.
இலஞ்சம் பெற்றது உண்மையாக இருந்தால், இலஞ்சம் வாங்குவதில் அக்கறை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைபினர் வரவு செலவு திட்டத்தினை வாசிக்காமல் 1000 புத்த கோவிலை எதிர்க்காமல் வாங்கிவிட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைபினறை நம்பி தமிழர் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் பொறுப்பினை கொடுக்கலாமா?
வடகிழக்கில் உள்ள தமிழ் தலைமைகள் 1000 புத்த கோவில்களை அத்துமீறி சிறிலங்கா அரசாங்கம் கட்டுவதை நிறுத்துவதற்கு அதிவேகமாக செயற்படவேண்டும்.
டம்புக்கான தமிழர்கள் ஆகிய நாம் கீழ்வரும் மூன்று ஆலோசனைகளை இந்த தலைவர்களுக்கு வழங்குகின்றோம்.
1. |
முதலில் அயலவர்களாகிய இந்தியாவிடம் இந்த கோவில்களை கட்டுவதை நிறுத்துதற்கு சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணம் கேட்கவேண்டும் |
2. |
இந்தியா தவறினால், அமெரிக்காவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் இந்த அத்துமீறிய குடியேற்றத்தினை நிறுத்தும் படி கேட்கவேண்டும் |
3.இரண்டும் நடைபெறாது போனால் தமிழர்கள் இந்த விடையத்தினை தங்கள் கையில் எடுத்து சிங்களவர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
Be the first to comment