தமிழரை முட்டாளாக்கும் கூட்டமைப்பின் மந்திரங்கள் : “தமிழ் மக்களின் இறைமையை ஒருபோதும் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்காது”

soverinty

Sovereignty, “Live free or Die” by General John Stark

தமிழரை முட்டாளாக்கும் கூட்டமைப்பின் மந்திரங்கள் : “தமிழ் மக்களின் இறைமையை ஒருபோதும் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்காது”

அடைக்கலநாதன் மேற்கூறியதை மட்டக்களப்பு மாவட்டத்தில் கூறியிருந்தார். இதனை தான் சம்பந்தநும் சுமந்திரனும் அடிக்கடி தமிழர்களுக்கு கூறுகிறார்கள்.
இணைப்பு :http://telo.org/?p=194404&lang=ta

மேலும் அடைக்கலநாதன் கூறினார் “தமிழ் மக்களின் இறைமையை ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்காது அதனை விட்டுக்கொடுக்கின்ற நிலை ஏற்படாது” என்று.

இறைமை என்பது: அதிகாரம், சுய ஆட்சி, வீட்டு ஆட்சி, சுயநிர்ணயம், சுதந்திரம்.
வ: authority ,autonomy, independence, self-government, self-rule, home rule, self-determination, freedom
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு

1. புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தினை சுமந்திரன் கொடுத்த போது தமிழரின் இறைமை அழிக்கப்பட்டது.
2. வடகிழக்கு இணைவது சாத்தியமற்றது என சுமந்திரன் பல முறை கூறினார். மேலும் அவர் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்களுடனான கூட்டத்தின் பின்னர் சவால் விட்டார். முடிந்தால், வடகிழக்கு இணைப்பு முயற்சி செய்யுங்கள் பார்ப்போம் . இது தமிழர்கள் தங்கள் இறையாமையை இழந்ததை காட்டுகிறது.
3. சுமந்திரன் அரசியலமைப்பில் தமிழ் மொழியில் பெயர் “சமஷ்டி ” தோன்றாது என்றதும், ஆனால் சிங்கள மொழியில் “ஒற்றை ஆட்சி” என்று தோன்றும் என்றபோது, தமிழர்கள் தங்கள் இறையாமையை இழந்ததை காட்டுகிறது.
4. உண்மையான சமஷ்டியில் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கவர்னர் (ஆளுநர்) இல்லை. அரசியலமைப்பில் கவர்னர் என்று அழைக்கப்படுகையில், தமிழர்கள் தங்கள் இறையாமையை இழந்ததை காட்டுகிறது.
குறிப்பு: தற்போதைய கவர்னர் தமிழ் மக்களின் மீது தனது அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
5. தமிழர் தாயகத்தில் ஆகாயம், கடல், மற்றும் நிலம் ஆகிய வளங்களில் தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்தபோது. தமிழர்கள் தங்கள் இறையாமையை இழந்ததை காட்டுகிறது.

எம் பி அடைக்கலநாதனின்”ஏமாற்று கதைகளுக்கு” எமது பதில்:

எம் பி அடைக்கலநாதன்: “இந்த அரசாங்கம் எங்களை ஏமாற்றுமாயின் எங்களது மக்களின் நலனுக்காக அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு வெளியில் வருவோம்.”
எமது பதில்: ஜனாதிபதியே சொல்லிவிட்டார் வட கிழக்கு இணைப்பும் , சம்ஷடியும் இல்லை. அத்துடன் சுமந்திரன்னும் சைவம் மற்றும் கிறிஸ்தவத்தையும் இரண்டாம் இடம் கொடுத்துவிட்டார். இனி இந்த அரசாங்கம் என்னத்தை ஏமாற்றுவது. இனி மக்களின் நலனுக்காக அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு வெளியில் வாருங்கள் .

எம் பி அடைக்கலநாதன்: அரசாங்கத்தை கை நீட்டி நியாயம் கேட்கின்ற வாய்ப்பை நாங்கள் பெற வேண்டுமாக இருந்தால் நாங்கள் ஒரு சில விட்டுக்கொடுப்புக்களை செய்தாக வேண்டும்
எமது பதில்: நாங்கள் ஏற்கனவே தமிழ் ஈழத்தை சம்ஷடிக்கு பதிலாக விட்டுக்கொடுத்துள்ளோம். இனி என்னத்தை விட்டுக்கொடுக்க யோசிக்கிறீர்கள்? அரசாங்கத்தை கை நீட்டி வாங்கியது உதவி தவிசாளர் பதவி, அதனைஉங்கள் திறமைக்காக தரவில்லை. நீங்கள் சுமந்திரன்னுக்குடாக அரசாங்கத்திடம் கை நீட்டி வாங்கியது. நீங்கள் “கை நீட்டி” என்ற வார்த்தையை பாவிப்பது நீங்கள் கை நீட்டி எதோ வாங்கியுள்ளீர்கள் என்பதையே குறிக்கிறது .

எம் பி அடைக்கலநாதன்: அந்த இறைமையை அடைமானம் வைத்து விட்டார்கள் என்று சொல்பவர்களிடம் நான் திருப்பிக் கேட்கின்றேன், அதை உதாரணப்படுத்திச் சொல்லுங்கள் என்று.
எமது பதில்: எந்த இறைமையை அடைமானம் வைக்கவில்லை என்று சொல்லுங்கள். எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்தீர்களே.

“சிங்கள மக்களால் 146,00 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட பின்னர் கூட, அவர்களின் நலனுக்காக தமிழர்களின் உரிமைகளையும்/அதிகாரகாரங்களையும் அல்லது இறையாண்மையை விற்பவர்களுக்கு நரகத்தில் ஒரு சிறப்பு இடம் உள்ளது.”

“There is a special place in hell for those who trade Tamils’ sovereignty for their own benefit after watching the killings of 146,00 Tamils by Sinhalese.”

About Tamil Diaspora News.com 524 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.