2018-08-29 13:24:56 சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் நம்மை ஏமாற்றுகின்றனர் என்பது தெரிந்த உண்மை. எனினும் அந்த ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் நம் அரசியல் தலைமை நடந்து கொள்கிறதா? என்றால் இல்லை. தமிழ் அரசி யல் தலைமைக்கும் தெரிகிறது எனும்போது தனித்து தமிழ் மக்கள்தான் ஏமாறுகிறார்கள் என்பது நிஜமாகிறது. இதை நாம் கூறும்போது, சிங்கள ஆட்சி யாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் நம் தமிழ் அரசியல் தலைமை எதற்காக அரசாங்கத்துடன் இணைகிறது என்ற கேள்வி எழும். இங்குதான் நேர்மையான அரசியல் தலை வர்களின் பஞ்சத்தை தமிழினம் அனுபவிக்கின்றது எனக் கூறிக் கொள்ள முடியும். ஆம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இரண்டு கோடி ரூபாய் இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாகக் கூறியிருந்தார். அவர் கூறியது சரி; பிழை என்பதற்கப்பால், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவ சக்தி ஆனந்தன் தான் சார்ந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தலைக்கு இரண்டு கோடி ரூபாயை இலஞ்சமாகப் பெற் றுக் கொண்டனர் எனக் கூறும்போது, அதனை நிறுதிட்டமாக நிராகரிப்பது சம்பந் தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை யாக இருந்திருக்க வேண்டும். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை கவனத்தில் எடுக்காததுபோல் கூட்டமைப்பு நடந்து கொண்டது. இதன் அடுத்த கட்டமாக, கூட்டமைப்பு செல் வாக்கையும் பணத்தையும்தான் எதிர்பார்க் கிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக் களை பார்க்கும்போது, அபிவிருத்திச் செய லணியில் பங்குபற்றுவதன் பின்னணி என்ன வாக இருக்கும் என்ற ஊகங்கள் தவிர்க்க முடியாததே. அதாவது அபிவிருத்திச் செயலணியில் பங் கேற்பது என்பது உண்மையில் அபிவிருத்தி கருதியதாக இருந்தாலும் குற்றச்சாட்டுக்களும் செயலணியின் போக்கும் பாதகமாக இருக் கும்போது, உண்மையான சிந்தனையும் ஐய வினாவுக்கு உட்படவே செய்யும். எதுவாயினும் அபிவிருத்திச் செயலணி இலங்கை அரசை ஜெனிவாவில் காப்பாற்று வதற்கானது என்று தமிழ்ப் பற்றாளர்கள் கூறிக் கொள்ளும் அதேநேரம், வடக்கு கிழக்கு அபி விருத்தியில் படையினரும் பங்கேற்பதால் அவர்கள் மீதான போர்க்குற்ற விசாரணை என்பது அர்த்தமற்றதாகி; இலங்கைப் படையினர் தமிழ் மக்களுக்காக மிகப்பெரும் அபி விருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றனர் என்பதாக நிலைமை மாறும். இதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்கிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. தவிர, சின்னஞ்சிறு பிள்ளைகளிடம் உங்கள் அப்பா ஆனந்தசுதாகரனை விடுதலை செய் வேன் என்று உறுதியளித்த ஜனாதிபதி அத னைச் செய்யவில்லை எனும்போது, சம்பந்த ருக்கு வழங்கிய அபிவிருத்தி என்ற உத்தர வாதத்தை மட்டும் நிறைவேற்றுவார் என்று எப்படி நம்ப முடியும் என்ற கேள்வியை முன்வைப்போர், ஜனாதிபதியைப் பொறுத்தவரை குழந்தைகளும் முதியவர்களும் ஒரே நிலைதான் எனத் தெரிகிறது என்கின்றனர். |
Be the first to comment