சுமந்திரன் மீண்டும் தனது நிறத்தை காட்டிவிட்டார் – ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊழியர் (Indentured servant)

இந்த செய்தியின் ஆதாரம் விரகேசரி.
இந்த செய்திக்கான இணைப்பு இங்கே:

https://www.virakesari.lk/article/100185

சுமந்திரன் மீண்டும் தனது நிறத்தை காட்டிவிட்டார் – ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊழியர் (Indentured servant)

பேரணியின் முக்கியமான கொள்கை சர்வதேச நாடுகளின் பார்வை ஈர்க்கப்பட வேண்டும் என்பதேபிரதான நோக்கமாக காணப்பட்டது.

தமிழ் பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் எழுச்சி பேரணி முன்னெடுக்கப்பட்டது

பேரணியை தடுக்க அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு போராட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. போராட்டத்தில் தமிழ்- முஸ்லிம் என இலட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டார்கள்.

இலட்சக்கணக்கான தமிழ் மக்களை ஒன்றிணைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட எழுச்சி பேரணியின் உண்மை நோக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறைத்து ஏதோ கோரிக்கைகளை மாத்திரம் பாராளுமன்றிரல் அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.

நேரத்திற்கேற்றாற் போல் செயற்படும் கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழர் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேரணியில் கலந்துக் கொண்டவர்களுக்கு துரோமிழைத்துள்ளார்.

தேவைக்கேற்ப செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழர் விவகாரத்தில் தீர்வை பெறும் போராட்டத்தில் இனி ஒன்றினைய முடியாது.

இச்செயற்பாடு பேரணியில் ஈடுபட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் நோக்கம் சுமந்திரனால் மளுங்கடிக்கப்பட்டுள்ளது – கஜேந்திரகுமார்

About Tamil Diaspora News.com 432 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்