சுமந்திரன் தேர்தலுக்கு பணம் தெண்டலுக்கு லண்டன், கனடா வருகின்றார்.

suma tilt

ரணில், திறைசேரியில் சட்டத்திற்கு எதிராக பணம் எடுத்ததன் காரணமாக பல லட்சம் கோடி ரூபாக்கள் காணமல் போய்விட்டதால் ரணில் இம்முறை த. தே. கூட்டமைப்புக்கு பணம் கொடுக்க முடியாமையால், சுமந்திரன் பணம் தெண்டலுக்கு லண்டன், கனடா வருகின்றார்.

இவர் லண்டனில் £ 50,000 உம், கனடாவில் $ 100,000 சேகரிக்க முற்படுகின்றர்.

இவருக்கு பணம் கொடுப்பது தமிழரின் அழிவுக்கு கொண்டு போய்விடுமா என்பதனை ஆலோலிசித்து தான் பணம் கொடுப்பவர்கள் தமது பணப்பையை திறக்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழ்பவர்கள் சிறிலங்காவில் நடக்கும் தேர்தலுக்கு பணம் கொடுப்பது சிறையில் போகக் கூடிய குற்றமா? என்பதை முதலில் அறிய வேண்டும்.

அமெரிக்காவில் நடக்கும் தேர்தலுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் கொடுப்பது குற்றமாகும். இந்த குற்றம் 5 வருட சிறையாகும்.

இதை மறுபக்கும் பார்க்கும் போது குற்றம் என்பதை கனடா, லண்டன் வாழும் தமிழர்கள் சட்ட புத்தகத்தை வாசிக்க வேண்டும்

தமிழரசுக் கட்சியை எனிவரும் தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் தமிழர்கள் இறையாண்மையை (Soverinity) இழந்து அடிமையாகவே வாழவேண்டிவரும்.

சுமந்திரனின் கொள்கையானது தமிழ் இறையாண்மையை (தமிழரின் அதிகாரங்கள்) இல்லாமல் செய்வது மட்டுமல்ல தமிழ் இனத்தை அழித்துவிடும்.

1.சுமந்திரன் பௌத்திற்கு முதல் இடம் கொடுப்பது சிங்கள பௌத்தர்கள் தவிர ஏனையை யாவரும் தமது இறையாண்மையை இல்லாதொழிக்கும்.

உதாரணமாக, நல்லூர் கோவில் அருகில் ஒரு புத்தர் சிலையை வைத்து காலப்போக்கில் அதனை பெரிய பௌத்த கோவில் ஆக்கும் போது , பௌத்தற்கு முதலிடம் என்று நல்லூர் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றும் நிலையோ, அல்லது உடைக்கவோ அல்லது சிறிய கோவிலாக்கும் நிலையோ ஏற்படும்.

2.சுமந்திரன் வடகிழக்கு இணைப்பு இப்போது முடியாது என்று பலகாலம் சொன்னார். இப்போ முஸ்லீம் மக்களுடன் யாழ் நூலகத்தில் கூட்டம் வைத்த பின்னர், இயலுமாயின் வடகிழக்கை இணைத்து பாருங்கள் என்றார். அதாவது “இயலுமென்றால் பண்ணிப்பார்.” என்றார்.

வடகிழக்கு இணைப்பில்லாவிடில் சில வருடங்களில் பலகவீனமான கிழக்கு தமிழர்களின் பேரப்பிள்ளைகள் சிங்கள அல்லது முஸ்லீம் பெயர்களை கொண்டு விடுவார்கள்.

உதாரணமாக தமிழசுக்கட்சியின் பொது செயலாளர் துரைராஜசிங்கத்தின் பேத்தியின் கடைசி பெயர் பதியுதீனும், பேரனின் பெயர் புஞ்சிபண்டாவுமாக இருந்தால், துரைராஜசிங்கம் இதனை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்க வேண்டும்.

எங்கள் பதில்: முதலில் சுமந்திரனை தமிழரசுக்கட்சியில் இருந்து விலக்க வேண்டும்.

3.தமிழர்களுக்கு சமஷ்டி இல்லை. தமிழ் பெயர் பலகையில் ஒன்றும் இராது. ஆனால் சிங்கள பெயரில் ” ஒற்றையாட்சி” அல்லது ” எக்கிய ராச்சிய”என்று இருக்கும். சிங்களத்தில் உள்ளதுதான் சிங்கள நாட்டின் சட்டம்.

சுமந்திரன் சொல்லுகின்றார், அவர் “ஒன்று பட்ட நாடு” வரைவிலக்கணம் கொடுத்துள்ளாராம் ஆனால் எக்கிய ராச்சிய வின் தமிழ் மொழி பெயர்ப்பு ஒற்றையாட்சி. அப்படியானால் அவர் எனி நீலத்தை பச்சை என்றும் வரைவிலக்கணம் கொடுக்கலாம்

சிங்கள நீதிபதிகள் தான் எல்லாவற்றினையும் முடிவெடுப்பார்கள். ஞாபகம் இருக்கின்றதா கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக இடமாக இருந்தும் சிங்கள உயர் நீதிமன்றம் வடகிழக்கு இணைப்பை உடைத்தவர்கள். தலைமை நீதிபதி சரத்டி சில்வா சுமந்திரனின் நண்பர் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.

சிங்களத்தில் உத்தியோக பூர்வமாக ஒற்றையாட்சி என்று இருப்பதால் தமிழர்கள் கடந்து 70 வருடங்களாக பட்ட துன்பத்தினை தொடர்ந்தும் அனுபவிப்பார்கள்.

4.சுமந்திரன் கொழும்பில் இருந்து விசேட அதிரடி படைகள் (STF) உடன் யாழ்வந்து, தமிழ் பத்திரிகை சுதந்திரத்தை அடக்கப்பார்க்கின்றார்.

தினக்குரல் எழுதிய உண்மை: வடமராட்சியில் சுமந்திரன் பேசும்போது “சிங்கள மக்களின் அச்சம் நீங்கவே ஒற்றையாட்சிக்கு இணங்கினோம்.” இவருக்கு எதிராக உண்மையை எழுதினால் அவருக்கு கோபம் வரும்.

தினக்குரலின் உண்மையான செய்தியைப் பார்த்தவுடன் “திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்” என்று தினக்குரலை மிரட்டினார். இது ஒரு ஜனநாயகம் இல்லை.

புலம்பெயர் மக்களாகிய நாம் ஜனநாயக நாடுகளில் இருப்பதால் பலர் நன்கு கற்றவர்களாகவும், தனவந்தவர்களாகவும், போரினால் பாதிக்கப்பட்ட பலர் தமது கடந்த கால வடுக்களுடன் பயம் இல்லாமலும் பாதுகாப்பாகவும், வாழ்கின்றார்கள்.

ஜனநாயகத்தை மதியாதவர்கள் எமது தமிழர்களின் அரசியலில் தலையிடக் கூடாது .

எனவே

1. சிங்கள பௌத்தற்கு முதலிடம் கொடுத்து இறையாண்மையை அழித்தது.
2. வடகிழக்கு இல்லை என்பது கிழக்கில் தமிழ் இன அழிப்பு
3. சிங்களவர்களுக்கு பெயர்பலகையில் “ஒற்றையாட்சி” தமிழருக்கு பெயர்பலகையில் ஒன்றும் இல்லை என்பது பம்மாத்து.
4. தமிழ் பத்திரிகை சுதந்திரத்தினை அடக்க எச்சரிக்கை செய்பவர், பெரும் அழிவை சந்தித் த தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது.

சுமந்திரனுக்கு பணம் கொடுப்பதன் மூலம் அவர் தமிழ் வாக்குகளை விலைக்கு வாங்குவதால், தமிழரின் எதிர்கால நன்மைக்காக நல்ல கொள்கையுடன் (தனவந்தர் இல்லாத) வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க விடாமல் தமிழரை அழிவுக்கே கொண்டு செல்லும்.

About Tamil Diaspora News.com 285 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.