சுமந்திரன் ஜெனீவாவுக்கு செல்ல அனுமதித்தவர் யார்?

UNPSumanthiran

சுமந்திரன் ஜெனீவாவுக்கு செல்ல அனுமதித்தவர் யார்?

நடந்து முடிந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி 34% தமிழ் வாக்குகளையே பெற்றது. வாக்குகள் 50% க்கும் குறைவாக இருந்தாதல் இது தமிழரசுக் கட்சிக்கு ஒரு இழப்பு. தமிழரசுக் கட்சி க்கு தமிழர்களால் எந்த உத்தரவும் ஆணையும் வழங்கப்படவில்லை. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்கெடுப்பு திரு. சுமந்திரனின் கொள்கையை ஆணையாக (Referendum on Sumanthiran’s policy) இருந்தது. சுமந்திரனின் அரசியல் தீர்வு தொடர்பாக சிந்தனையும் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான சிந்தனையும் தமிழ் மக்கள் நிராகரித்ததை இது காட்டுகிறது. எனவே, திரு சுமந்திரன் மக்களிடம் இருந்து எந்தவிதமான கட்டளையையும் கொண்டிருக்கவில்லை, தமிழர்கள் அவருடைய கொள்கைக்கு எதிராக இருந்தனர்.

ஐ.நாவில் சுமந்திரன் மீண்டும் கால நீட்டிப்பு கோரியதன் மூலம், தமிழர்களின் நிலத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களின் இனப்பரம்பலை அதிகரிக்கும் . இது தமிழர்களின் சனத்தொகை குறைக்கும். இதனையே சிங்களவர்கள் கிழக்கில் செய்தார்கள். தற்போது வடக்கில் செய்கின்றார்கள்.

இதன் பின்னர் ஒரு சர்வஜென வாக்கெடுப்போ அல்லது அரசியல் தீர்வோ தமிழர்களுக்கு தேவையற்றது என்று சிங்களவர்கள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். இதனையே சிங்கள அரசு விடுதலைப்புலிகளுடனான போரின் போது, கால நீட்டிப்பு செய்து புலிகளை பலவீனமாக்கி இறுதியில் அழித்தது.

அதன் பின்னர் இனி புலிகள் இல்லை என்று பேச்சுவார்தையோ, ஒஸ்லோ தீர்மானத்தினையையோ என்று அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

தமிழ் தேசியத்தினை விரும்பாத சம்பந்தனும், சுமந்திரனும் கால நீடிப்பை விரும்புதற்கு காரணம் இதுவே.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரிட்டிஷ் தூதுவரை சந்திப்பதற்கு ஜெனீவாவுக்கு ஏன் திரு. சுமந்திரன் சென்றார்? அதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ அல்லது புத்திஜீவிகளிடமோ பேசினாரா?

ரணில், மைரித்திரி மற்றும் ஏனைய சிங்கள அமைச்சர்கள் இராணுவத் தளபதிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்கள். ஏனெனில் அவர்கள் இலங்கையின் தேசபக்தர்கள்.மைரித்திரி காணாமற்போனோர் காணாமற் போயுள்ளனர் என்றும் அவர் கூறினர். சிங்களத்திற்கு ஒரு வருடம் கொடுப்பதுமிகவும் ஆபத்தானது. எனவே, ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு இந்த இலங்கைப் போர்க் குற்றங்களை நாங்கள் அனுப்ப வேண்டும்.

ஏன் திரு. சுமந்திரன் இரகசியமாக ஜெனவாவுக்குச் சென்றார்? யு.என்.எச்.ஆர்.சியில் ஸ்ரீலங்காவுக்கு இன்னும் ஒரு வருடம் வழங்கவா? ரணில் தான் சுமந்திரனை ஜெனீவாவுக்கு அனுப்பினரா?

திரு. சுமந்திரன் தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் கலந்து கொள்ளக்கூடாது. அவர் இராஜி னாமா செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த தகவல்களின் படி திரு. சுமந்திரன் மற்ற எம் பி க்களுடனோ அல்லது வேறு எந்த புத்திஜீவிகளுடனோ ஆலோசிக்கவில்லை.

திரு. சுமந்திரன் இராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்க வேண்டும். சுமந்திரன் கள்ளமாக ஜெனீவா சென்றது ஒரு காயமடைந்த விலங்கு போல தோற்றமளிக்கப்பட்ட செயல். இது ஆபத்தானது.

திரு. சுமந்திரன் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை சேதப்படுத்தும் முன், அவர் எம்.பி. பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.

சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் நினைக்கிறார்கள் சிங்களத்துடன் எதிர்கால பேச்சுவார்த்தைக்கு சுமந்திரன் ஒரு அடித்தளத்தை அமைத்தார் என்று. அவை யாது என்றால்: வடகிழக்கு இணைப்பு இல்லை என்பதும், சமஸ்ட்டி இல்லாத எக்கிய ராஜியாயா என்பதும், பௌத்ததிற்க்கு முதலிடம் என்பதும், வடக்கு கிழக்கில் சிங்கள இராணுவம் குடி கொள்ள மறுப்பு இல்லை என்பதுமாகும்.

சிங்கள அரசாங்கத்தை பாதுகாப்பதே திரு. சுமந்திரன் மூலோபாயம். லண்டனில் பல தடவைகள் “ஸ்ரீலங்கா எமது நாடு, எனவே ஸ்ரீலங்காவுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கைகளை நாங்கள் அனுமதிக்கக்கூடாது” என்று கூறினார்.

About Tamil Diaspora News.com 461 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.