சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மண் அள்ளி கொட்டி கதறி அழுத தாய்மார்கள்

VavuniyaPoster

சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மண் அள்ளி கொட்டி கதறி அழுத தாய்மார்கள்: பல தாய்மார் மயக்கமுற்றும் வீழ்ந்தனர்

faintedwomen

Video
Video from the Demonstration

சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மண் அள்ளி கொட்டி கதறி அழுத தாய்மார்கள்: பல தாய்மார் மயக்கமுற்றும் வீழ்ந்தனர்

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு துரோகி எனத் தெரிவித்தும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு மண் அள்ளி வீசியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டனர்.

தாயகத்தில் கையயளித்தும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனீயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 324 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைக்கு முன்பாக கதறியழுத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களை காட்டி இவர்கள் துரோகிகள் எனவும் கதறியழுது மண்ணால் தூவியிருந்தனர்.

இதேவேளை பதாதையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு அடித்தும் அதற்கு முன்பாக இருந்து ஒப்பாரி வைத்த தாய்மார் இவர்களாலேயே தமது பிள்ளைகள் வெளிவராமல் உள்ளனர் எனவும் தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், சுமந்திரன் ஒரு துரோகி எனவும் தெரிவித்து கதறியழுததுடன் பல தாய்மார் மயக்கமுற்றும் வீழ்ந்தனர்.

இந் நிலையில் நாளைய தினம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமது பிள்ளைகள் வருவார்களா என்ற ஏக்கத்தினையும் வெளியிட்டிருந்தனர்.

About Tamil Diaspora News.com 524 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.