சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக கண்டன போராட்டம், கனடியத் தமிழர் முன்னணியின் அவசர வேண்டுகோள்!!!
சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக கண்டன போராட்டம்
கனடியத் தமிழர் முன்னணியின் அவசர வேண்டுகோள்!!!
கனடிய அனைத்துக் கட்சிகளும் ஈழத்தமிழருக்கு நடந்தது இனவழிப்புத் தான் என எமக்கு சாதகமான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் இவ் வேளையில் Ontario Bill 104 க்கு எதிராகவும்,கனடிய நடுவன் அரசின் இனவழிப்பு விசேட தீர்மானத்திற்கு எதிராகவும் பரப்புரையை முன்னெடுக்க, இனப்படு கொலையாளியான சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு கனடாவுக்குள் களமிறக்கியுள்ளது TNA சுமந்திரனை.
இவர் கனடிய இராஜதந்திரிகளுக்கும் மக்களுக்கும் முன்வைக்கும் திட்டமிட்ட பரப்புரை
“இலங்கை வாழ் தமிழ் மக்கள் இழப்புகளின் வலிகள். யாவும் மறந்து நல்லிணக்கத்தோடு சிங்கள அரசை ஏற்று வாழ்கின்றனர்!
தமிழ் மக்களுக்கு இலங்கைக்குள் ஒரு சிக்கலும் இல்லை!
கனடா வாழ் தமிழரும் இலங்கை அரசை ஏற்றுக்கொள்கிறார்கள்!” என தமிழர்கள் கூடுதலாக வாழும் கனடாவுக்கும் உலகநாடுகளுக்கும் ஒரு மாய நிலைப்பாட்டை காட்டுவதற்காக பொய்யுரைத்து, அதை வெற்றிகரமாக பரப்புரை செய்யும் சூழ்ச்சியான பல அணுகுமுறைகளில் ஒன்றாக கொடிய இன்படுகொலையாளிகளான சிறிலங்கா அரசால் இம்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது!
தமிழர்களை புண்படுத்தும் தமிழ் இனத்துரோகிகளின் செயல்களை கண்டித்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
சனிக்கிழமை மாலை 4:30 க்கு மணிக்கு 1686 Ellesmere Rd JC’S Banguet Hall க்கு முன்பாக கண்டனப் போராட்டத்தினை
கனடியத்தமிழர் முன்னணி ஒழுங்கு செய்திருக்கின்றது!
இதற்கு அனைத்து கனடியத் தமிழர்களும் மற்றும் அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து இக் கண்டன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உரிமையோடு அழைக்கின்றோம்!
இனப்படுகொலை செய்யப்பட்ட எம் மக்களை நெஞ்சிலே நிறுத்தி
ஒன்றாக அணிதிரள்வோம்!
கனடியத் தமிழர் முன்னணி
(CTF)