சிறிதரன், உங்களாலும் உங்கள் கட்சியினாலும்ஒன்றுமே சாதிக்க முடியாதுள்ளது; நீங்கள் யாவரும் அரசியலிருந்து வெளியேற வேண்டும்.

சிறிதரன், உங்களாலும் உங்கள் கட்சியினாலும்ஒன்றுமே சாதிக்க முடியாதுள்ளது; நீங்கள் யாவரும் அரசியலிருந்து வெளியேற வேண்டும்.

இரணைமடுவில் 5000 இராணுவத்தினரை குடியேற்ற நடவடிக்கை: சிறீதரன்
இணைப்பு: http://www.tamilwin.com/parliment/01/188662?ref=home-feed
சுமார் 3 1/2 ஆண்டுகள் நீங்கள் தமிழர்களை ஆதரிக்க கேட்டு உருவாக்கிய அரசாங்கத்தில் இருந்து ஏதும் செய்யவில்லை. தமிழர்கள் முன்னெப்போதையும் விட தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்களை பிரதிநிதி படுத்துவதிலிருந்து நீங்கள் எல்லோரும் தவறிவிட்டீர்கள். நீங்கள் சிங்களவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள். நீங்கள் தந்தை செல்வா சொன்னதையும் 70 வருட அனுபவத்தையும் அலட்சியப்படுத்தி விட்டீர்கள்.

சர்வதேச (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா) மத்தியஸ்தம் இல்லாமல் நீங்கள் எதையும் பெற முடியாது. இல்லையெனில், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். இது கடந்த 70 ஆண்டுகளாக நாம் கற்றுக்கொண்ட பாடம். தந்தை செல்வாவும் இதனையே சொன்னார்.

நீங்கள் எல்லோரும் வீட்டுக்கு போக வேண்டிய நேரம் இது.

எங்கள் பிரச்சினையை சரியாக அணுகுவதற்கு பலர் துணிவுடனும் அறிவுடனும் அனுபவத்துடனும் காத்திருக்கிறார்கள். இந்த இளைய தலைமுறை தமிழர்கள், அவர்கள் எமது இலட்சியத்தை அடைய விடுங்கள்.

நீங்கள் உழைத்து போதும். பணம் வேண்டுமென்றால் எம்மை கேளுங்கள் உங்கள் 15 பேருக்கும் தலா $50,000 (7 1 இலட்சம் ரூபா) தருகிறோம்.

நீங்கள் எல்லோரும் ராஜினாமா செய்தால், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தமிழர்கள் சம்பந்தமாக தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க சிறந்த நேரம் என்று, நிச்சயமாக தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை இராஜதந்திர ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் எடுத்து தருவார்கள். தயவுசெய்து ராஜினாமா செய்யுங்கள் .

இதுவரை நீங்கள் செய்த சாதனைகள்:

1) உங்களுக்கு பேரம் பேசுவது எப்படி என்பது பற்றி தெரியாது. பேச்சுவார்த்தைக்கு (பேரம் பேசுவதற்கு ) மேஜையில் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் விட்டு கொடுத்தார் திரு. சுமந்திரன்.

நீங்கள் சிங்கள குடியேற்றத்தை ஏற்றுக் கொண்டீர்கள் , பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை ஏற்றுக் கொண்டீர்கள், வடகிழக்கு இணைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பை விட்டுக்கொடுதீர்கள். “நாம் பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த சிங்கள நாட்டிற்குள்ளேயே வாழ விரும்பிகிறோம்” ஆயிரம் தடவை உலகத்திற்கு கூறினீர்கள் .

பேச்சுவார்த்தை நிபுணர்கள் சொல்லுகிறார்கள், பலவீனமான நிலையில் நம்மைத் தக்கவைக்கக்கூடாது என்று. அப்படியானால், பேச்சுவார்த்தைகளில் எங்களால் ஒருபோதும் வெல்ல முடியாது.

அரசியலமைப்பு சட்டசபைக்கு நேரடியாக பேச்சுவார்த்தை இல்லாமல் போவது ஒரு மோசமான முடிவு.

இது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் முட்டாள்தனமாகும்.

2) நீங்கள் இந்தியாவிடமோ அல்லது அமெரிக்காவிடமோ பேச விரும்பாதவர்கள், ஏனென்றால் அது உங்கள் போலி கெளரவத்தை (optics -பார்வையை ) காயப்படுத்தும் என சுமந்திரன் கூருகிறார்.

அமெரிக்கா அல்லது இந்தியாவுடன் நீங்கள் ஏன் பேச விரும்பவில்லை என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை சீன செல்வாக்கு அல்லது சீன லஞ்சம் காரணமா?

3) நீங்கள் நிறைய பணம் சிங்களம் மற்றும் சீனாவிடம் இருந்து பெற்றீர்கள். நீங்கள் சமரசம் பேச முடியாது மெனமாக்கப் பட்டுள்ளீர்கள். நீங்கள் இது பொய் என்று நிரூபிக்க விரும்பினால் , கடந்த 8 ஆண்டுகளாக உங்கள் குடும்ப வங்கி கணக்கைக் தமிழர்களுக்கு காட்டுங்கள். இந்த வழிமுறையை தான் நேர்மையை நிரூபிக்க வளர்ச்சியடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

4) நீங்கள் எல்லோரும் ஊழல்வாதிகள் ஆகிவிட்டீர்கள் (Corrupted), நீங்கள் கொழும்புக்குச் காரில் செல்லும் போது எப்படி பணம் சம்பாதிப்பதைப் பற்றி சிந்திக்கிறீர்கள். தமிழர்களையும் அவர்களின் துன்பங்களையும் பற்றி நீங்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லை. நீங்கள் எல்லோரும் நன்கு கொழுத்த ஊழல்வாதிகள்.

கடந்த 3 1/2 ஆண்டுகளாக நடந்தது என்ன என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாகவே கீழ் உள்ள இணைப்பு உள்ளது

யோகேஸ்வரன் எம்.பியிடம் 50 இலட்சம் ரூபா பேரம் பேசிய அர்ஜூன் அலோசியஸ்! – http://seithy.com/breifNews.php?newsID=207230&category=TamilNews&language=tamil

5) நீங்கள் செய்த பெரிய தவறுகளில் ஒன்று, நரியன் ரணிலின் யூ.என்.பி. அங்கத்தவன் மற்றும் சிங்கள ஏஜெண்டான சுமந்திரனை தமிழ் அரசியலுக்கு கொண்டு வந்தது .

6) கடந்த தேர்தலில், வடக்கிலுள்ள தமிழர்களின் ஆதரவையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, தமிழ் மக்களை ஏமாற்றும் சுமந்திரனின் கட்டளையை எடுத்துக் கொண்டு, மக்களால் அதிக வாக்கு பெற்ற மற்றும் சமகாலத்தில் தமிழர்களுக்கு காவலனாகவும் தலைவனாகவுள்ள “முதல்வர் விக்னேஸ்வரனை” அதிகாரத்தில் இருந்து அகற்ற பல தடவைகள் முயற்சி செய்து வடமாகாணத்தை முடங்கி வைத்தீர்கள். மற்றும் தீர்வில் ஏமாற்றினீர்கள்; காணாமல் போனோர், இராணுவ ஆக்கிரமிப்பு, காணிகள், இராணுவத்தின் பாலியல் துப்பிரயோகம் மேலும் பலவற்றை புறக்கணித்தீர்கள்.

7) வல்லரசுகளுக்கு நீங்கள் ஒருபோதும், ஏன் தமிழர்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான, அமைதியான, சுதந்திரமான இடம் தேவை என்று சிந்திக்க வைக்கவில்லை.

ஏனென்றால் நீங்கள் எல்லோரும் இதை வல்லரசுகளுக்கு விளக்கம் கொடுக்க தெரியாது. அல்லது சிங்களத்தின் மனதை குழப்ப விரும்பவில்லை.

8) நீங்கள் சூடான், போஸ்னியா அல்லது கோசோவா போன்ற பிற மோசமான நாடுகளுடன் ஸ்ரீலங்காவை ஒப்பிடவில்லை. இதனால் தான் எங்கள் போராட்டங்களை வல்லரசு நாடுகளுக்கு விளக்க முடியும்.

9) சிங்கள தலைவர்களையும், அமெரிக்கா இந்தியா, மற்றும் போர் குற்றம் போன்றவற்றினை எவ்வாறு கையாள்வது என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் ஆலோசனையைப் பற்றி வல்லுநர்களுடன் கலந்துரையாடவில்லை. போஸ்னியா, தென் சூடான் அல்லது கோசோவாவுடன் பணியாற்றிய சில நிபுணர்களை நாம் (புலம் பெயர் தமிழர்கள்) அறிமுகப்படுத்தியிருக்கலாம்.

10) இறுதியாக, போர் குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லத் தவறி, அதற்கு பதிலாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு உள் நாட்டு விசாரணையாக்கி பின்னர் போர் குற்றங்களை தணித்து விட்டீர்கள்

உங்களிடமிருந்து தேர்தல் காலங்களிலும் தேர்தலில் தோற்ற பின்னரும், வரும் உணர்ச்சியான பேச்சுகள் அல்லது மனங்களை தொடும் பத்திரிகை வெளியீடுகள் எல்லாம் போலித்தனமானது.

நன்றி,

புலம் பெயர் தமிழர்களின் செய்திகள்

About Tamil Diaspora News.com 524 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.