|
|
சம்பந்தன் விக்னேஸ்வரனை ஏமாற்றி தமிழ் அரசியலில் இருந்து விக்னேஸ்வரனை வெளியேற்ற முற்றப்படுகிறார்வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசு நடத்திய நாடகம் எல்லாம் விக்னேஸ்வர னுக்கு செய்யும் சூழ்ச்சி.
இந்த 3 விடயங்களையும் சொல்லி அவர்:
விக்னேஸ்வரனை அடுத்த முதல் மந்திரியாக மீண்டும் நியமிக்கலாம் என்று ஒரு மாயையை உருவாக்கினார், ஆனால் விக்னேஸ்வரன் சம்பந்தனின் கூற்றுக்கு பதிலாக “கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” என்றார். இங்கு விக்னேஸ்வரன் யாரை “கொடுத்த கை” என்கிறார்? சம்பந்தன் யோசித்திருக்கலாம் “கொடுத்த கை” தன்னை என்று. வட மாகாண மக்கள் நினைக்கிறார்கள் கொடுத்தகை என்பது வாக்கு போட்ட தமிழர்களை என்று. சம்பந்தன் மறு நாள் தான் தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் யார் என்று இப்போது சொல்ல மாட்டார் என்கிறார். இவ்விடயத்தை ஒரு சஸ்பென்ஸாக வைக்க சம்பந்தன் விரும்புகிறார். சஸ்பென்ஸாக உள்ளதால் விக்னேஸ்வரனை மௌனமாகியுள்ளார் என சம்பந்தன் நினைக்கிறார். நியமன தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன் விக்னேஸ்வரனை விட சம்பந்தனால் வேறொருவர் நியமிக்கப்படுவார். ஒருவேளை மாவை அல்லதுபாதிரியார் இம்மானுவல். இது விக்னேஸ்வரனை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக்கும், பின்னர் படிப்படியாக தமிழ் அரசியலில் இருந்து விக்னேஸ்வரன் ஓய்வு பெறுவார். இதுவே, தமிழ் அரசியலில் இருந்து விக்கினேஸ்வரன் விலகுவது இன்று சிங்கள தலைவர்களுக்கு குறிப்பாக சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் சிங்கள நண்பர்களுக்கு மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் வட மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் விக்னேஸ்வரன் எல்லோரும் சம்பந்தனின் தந்திர வேலைகளை கடந்த 10 வருடங்களாகஅறிந்திருக்கிறார்கள். சம்பந்தனின் தந்திர வேலைகளில் ஒன்று: வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி தீர்வு “எக்கி ராஜஜியா” ஆனது எப்படி என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
|
Be the first to comment