சம்பந்தன் சிங்கள குடியேற்றத்தினை ஏன் எதிர்ப்பதில்லை? இன்று முல்லைத்தீவும் பறி போகுது.

worshipping Sampanthan

இந்த படம் காட்டுகிறது, திரு. சம்பந்தன் தமிழ் மக்களின் தராதரத்தை அவமதிக்கிறார். ஒருவேளை திரு.சம்பந்தர் போர்குற்றவளி திரு. மைத்திரி ஸ்ரீசேன வணங்குவதர்ட்க்கு காரணம் அவரது எதிர்க்கட்சி தலைமை பதவி மகிந்தவுக்கு கொடுக்காமல் நிறுத்துவதர்ட்க்கு.

சம்பந்தன் சிங்கள குடியேற்றத்தினை ஏன் எதிர்ப்பதில்லை? இன்று முல்லைத்தீவும் பறி போகுது.

புலிகளின் கொள்கைக்கு எதிர்ப்பான அடிப்படையிலானதுதான் சம்பந்தனின் கொள்கை!

சிங்களம் அரசாங்கம் தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றத்தை நடத்தும் போது ஏன் தனது ஆட்சேபனைகளை சம்பந்தன் எழுப்புவதில்லை?

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் மகாவலி அதிகார சபையின் கீழ் உள்வாங்கும் முடிவு ஒன்று நேற்று முன்தினம் (3/19/2018) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தின் கீழ் வரும் இந்த மூன்று கிராமங்களையும் சேர்ந்த 13 கிலோ மீற்றர் நீளமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியையே மகாவலி அதிகார சபையின் கீழ் என்ற பெயரில் சிங்களப் பகுதிகளுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த சிங்கள மயமாகும் தமிழ் கிராமங்களை ஏன் இந்த சம்பந்தனோ, மாவையோ , சிறி தரனோ, சிவமோகனோ தடுக்குமாறு கேட்கவில்லை?

தமிழரின் அரசியல் வலுவை குறைப்பதற்கும், தமிழ் கிராமங்களை சிங்கள மயமாக்குவதற்கும் எல்லைகளை சிங்களவர்கள் கையாளுகிறார்கள்.

சம்பந்தன் அமைதியாக இருப்பதன் நோக்கம் வடக்கு கிழக்கில் தமிழ் பெரும்பான்மை இருக்கக் கூடாது என கருதினால், அவர் தனது தமிழ் பிரதிநிதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

தேர்தல் காலத்தில் வடகிழக்கு இணைந்த கூட்டாட்சிக்கு சம்பந்தன் உறுதியளித்தார்.

இரு சிங்கள மந்திரிகள் மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் கருத்துப்படி, அரசியலமைப்பு மன்றத்தில், சம்பந்தர் வடகிழக்கு இணைப்பு அல்லது கூட்டாட்சியைப் பற்றி கேட்டதில்லை.

ஆனால் அப்படி கேட்கவில்லை என்பது பொய்யானால் இந்த சிங்கள மந்திரிமார்களினதும் மனோ கணேசனினதும் அறிக்கையை ஏன் திரு.சம்பந்தன் மறுதலிக்கவும் இல்லை

ஒரே ஒரு விஷயம், நாம் எல்லோருக்கும் நினைத்துப் பார்க்க முடியும், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன தமிழருக்கான இலட்சியம் என்று போராடினார்களோ அதனை எதிர்த்துதான் சம்பந்தனின் கொள்கையும் இருக்கின்றது.

அவற்றை இங்கு பட்டியலிடலாம்:

1. தமிழீழத்திற்காக புலிகள் போராடினார்கள். சம்பந்தன் தமிழீழத்தை விரும்பவில்லை ஏனெனில் தமிழ் ஈழம் புலிகளின் இலட்சியம் என்பதால். அதாவது அவர் கூறுகிறார். ஒன்றுபட்ட பிரிக்க முடியாத மற்றும் பிரிக்கப்படவியலாதது நாடு தான் தனக்கு வேண்டும். பிரிக்கப்படவியலாதது என்பதின் கருத்து மீண்டும் புலிகள் வந்தால் ஈழம் கிடைப்பதை நிறுத்துவதர்க்கு ஒரு பொறி என்று நினைக்கிறார்.
2. புலிகளின் காலத்தில் வடகிழக்கு தமிழர்கள் தாயகமாக இருந்தது . அதனால் அவரருக்கு வடக்கு-கிழக்கு இணைப்பை விருப்பமில்லை. சம்பந்தர் சொல்லுகிறார் சிங்களவர்களவர்களிடமும் முஸ்லிம்ககளிடமும் கேட்டு தான் வாங்க வேண்டுமாம் .
3. மகாவம்சத்தின் பதிப்பில் தமிழரை (மற்றவர்களை ) கொண்டு அழிப்பது பௌத்தத்தில் செய்யும் தர்மம் என்று கூறியதன் காரணமாக சிங்கள பௌத்தத்தை புலிகள் விரும்பவில்லை . இதனால் சுமந்திரன் மூலம் சம்பந்தன் சிங்கள பௌத்தவாதிக்கு முன்னுரிமை அளிப்பதாக பரிந்துரைத்தார்.
4. புலிகள் சிங்கள குடியேத்தத்தை தாயகத்தில் எதிர்த்தார்கள், இதனால் தான் சிறிலங்காவின் சிங்கள குடியேற்றத்தை சம்பந்தர் எதிர்க்கவி ல்லை
5. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பு என சம்பந்தன், சுமந்திரன் அடிக்கடி சர்வதேச சமூகங்களுக்கும் சிங்களவர்களுக்கும் கூறினார்கள்.
6. முள்ளிவாய்க்காலில் கொல்லப்படட தமிழர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு கடந்த 8 வருடங்களும் போகவில்ல, அவர்கள் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தனர் என்பதர்க்காக . கடந்த வருடம் மட்டும் தான் தேர்தலினால் போனார்கள்.
7. புலி ஆதரவாளர்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் என அவர் விரும்பவில்லை

நன்றி
தமிழ் புலம்பெயர் செய்திகள்
எங்களைப் பார்வையிடவும்: www.tamildiasporanews.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.