கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தது கூட்டமைப்பு : வலம்புரி

valupuri-june7

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. என்ற பாடல் பலரும் அறிந்ததே.

மனித உடம்பின் நிலையாமையை எடுத்துக் கூறுவதற்காக கடுவளிச்சித்தரால் பாடப்பட்டதே இது.

இந்தப் பாடலை வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி அவர்கள் ஒருமுறை வடக்கு மாகாண சபையில் கூறியிருந்தார்.

வடக்கு மாகாண சபையில் வெளிநடப்புச் செய்யும்போது இந்தப் பாடலைப் பாடிய வண் ணம் பசுபதி அவர்கள் சபையை விட்டு வெளி யேறினார்.
அப்போது அவர் எதற்காக இந்தப் பாடலை பாடுகிறார் என்பது நமக்கு மட்டுமல்ல, அவருக் குமே தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆனால் இப்போது நந்தவனத்து ஆண்டி யார் என்பதை வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி அவர்கள் நன்கு தெரிந்திருப்பார் என்று நம்பலாம்.

நல்லாட்சி என்று கூறி அவர்களோடு சேர் ந்து சர்வதேச விசாரணையையும் கைவிட்டு; ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்கு விதித்த நிபந்தனைகளை நிறை வேற்ற கால அவகாசமும் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் நந்தவனத்து நாட கத்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நல்லாட்சி எல்லாம் தரும் பொறுத்திருப் போம் என்பார் சம்பந்தர் அவர்கள்.
புதிய அரசியலமைப்புக்குள் சமஷ்டியும் இருக்கிறது. ஆனால் அது வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளது என்பார் தமிழரசுக் கட்சி யின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம்.

எங்கள் பொறுமையை அரசு சோதிக்கக் கூடாது என்று அதட்டலுடன் சொல்வார் எதிர்க் கட்சித் தலைவர்.

இவற்றையயல்லாம் கூறிக்கொண்டு பிரத மர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து தங் கள் நலனை மட்டுமே கவனித்த தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு, இப்போது எல்லாவற்றையும் போட்டுடைத்துவிட்டது.

சுருங்கக்கூறின் நல்லாட்சிக்கு கூட்டமைப்பு வழங்கிய ஆதரவால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதற்கு அப் பால், தமிழ் மக்களுக்கு இருந்த சர்வதேசப் பலமும் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது.

இது ஒருபுறமிருக்க, இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கடும் கோபம் கொண்டுள்ளார்.
அந்தக் கோபத்தை காட்டிலும் பல மடங்கு கோபம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது ஏற் பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென நான் கடுமையாகப் பாடுபட, கூட்டமைப்போ ஒரு காலத்தில் இனப்பிரச் சினைக்கான தீர்வுத் திட்டத்தை பாராளுமன் றத்தில் வைத்துக் கிழித்தெறிந்தவர்களுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டு அவர்களின் தாளத் துக்கு ஆட்டம் போடுகிறது.

இந்தாப்பார் நான் யார் என்று காட்டுகிறேன் என்பதுபோல ஜனாதிபதி மைத்திரிபால தன் விஸ்வரூபத்தை காட்டத் தலைப்பட்டுள்ளார்.
போதாக்குறைக்கு பிணைமுறி சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களுடன் வெளியிடப்பட, எங்கட கூட்டமைப்பு கூத்தாடிப் போட்டுடைத்தது தெரியவரும்.

About Tamil Diaspora News.com 432 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.