ஓரினச் சேர்க்கை திருமணத்தை இந்து மதகுருவால் செய்ய முடியாது/Gay marriage can not be performed by Hindu priest :இந்து குருமார் ஒன்றியம் – கனடா
ஒரு இந்து மதகுரு கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை நடத்திய பிறகு, இந்து குருமார் ஒன்றியம் – கனடா வெளியிட்ட அறிக்கையின் உரை கீழே உள்ளது, கடிதத்தின் புகைப்பட நகலும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்து குருமார் ஒன்றியம் – கனடா
வன்மையாக கண்டிக்கின்றோம் !
கடந்த 26,09.202| ஞாயிற்றுக்கிழமை Canada Grafton City யில் நடைபெற்ற ஒரு
திருமண நிகழ்வு பெரும் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது இந்நிகழ்வினை
சிவறீ.வி.ரங்கநாதக்குருக்கள் அவர்கள் நடாத்தி வைத்துள்ளார்.கனேடிய திருமண
பதிவுச் சட்டங்களுக்கு அமைவாக அவர நடாத்திய நிகழ்வுகளை யாருமே.
விவாதிக்க முடியாது. எமது நாட்டில் ஒரினபால் திருமணங்கள் சட்டபூர்வமாக.
அங்கீகரிக்கபட்டுள்ளன.
ஆனால் சைவ சமய,ஆகம முறைகளையும் இனைத்து இத் திருமணத்தை:
நடாத்தியது, சமய குருமார்கள்,சமய அபிமானிகள், கலாச்சார நலன் விரும்பிகள்
என பல தரப்பட்டவர்களாலும்,தற் பொழுது பலவாறு விவாதிக்கப்பட்டு
வருகின்றது இவ்விடயம் சம்பந்தமாக 30.09.2021 வியாழக்கிழமை
கனடா இந்துகுருமார் ஒன்றியம் அவசர அங்கத்தவர் கட்டத்தை ௯ட்டி
விவாதித்தது.அக் கூட்டத்திற்கு சிவளா.வி.ரங்கநாதக்குருக்களுக்கும் அழைப்பு
விடுத்திருந்தோம். ஆனாலும் அவர் அன்று சமூகம் தரவில்லை. பல முறை:
தொடர்பு கொண்டும் அவருடைய தொடாபு கிடைக்கவில்லை. அதனால்.
அவருடைய தரப்பு தன்னிலை விளக்க கருத்துக்களை எங்களால் பெற
முடியவில்லை.இருந்தும்.
சைவு சமய மதத்தின் நடைமுறைகளுக்கு ஒவ்வாத வகையில் பல சைவ சமய
அபிமானிகள் மனம் வருந்தக் கூடிய முறையில் இத்திருமணத்தை ஆகம
முறைப்படி நடாத்தியதை கனடா இந்துகுருமார் ஒன்றியம் வன்மையாக
கண்டிக்கின்றது. இனிமேல் வருங் காலங்களிலும் ஏனைய குருமார்களும்
இப்படியான நடைமுறைகளை பின்பற்றக் கூடாது என்பதையும் தெளிவு படுத்தி
வலியுறுத்தி வேண்டிக்கொள்கிறோம்.
இந்துகுருமார் ஒன்றியத் தலைவர்:
சிவஷரி .ச.ஷிரீதரக்குருக்கள்