தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பினில் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்களதும் சந்திப்பு அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் எமது எமது இனம் ,கலாச்சாரம்,பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுவதன் மூலம் எமது இருப்பு அழிக்கப்பட்டுவருவதாகவும் மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையினில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்க்கும் வகையில் வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி அமைப்புக்கள் செயற்படவேண்டுமெனவும் இதனை கருத்தில் கொண்டு தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்கவும் மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.
இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பேரில் போலியான அறிக்கையொன்றை கூட்டமைப்பு தயாரித்து தனது கட்சி பத்திரிகையான உதயன்; மூலம் செய்தியினை வெளியிட்டிருந்தது.இதன் மூலம் மக்களை பல்கலைக்கழக சமூகம் கூட்டமைப்பு பக்கமென்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் முடிந்திருந்தது.
அதேபோன்று இம்முறையும் மாணவர் ஒன்றியத்தின் பெயரில் அறிக்கையொன்றை வெளியிட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஒருசிலருடன் கூட்டமைப்பு தலைமை நேற்று பேச்சுநடத்தியுள்ளது.எனினும் மாணவ தலைவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லையென தெரியவருகின்றது.
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்
Be the first to comment