|
இப்போது, சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார். சிங்களப் பிரதேசத்தில் அவர் ஏன் சுற்றி வந்து புதிய வரைவு அரசியலமைப்பைப் பற்றி சிங்கள மக்களுக்கு கூறி வருகிறார்? இது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் அல்லது தற்போதைய சிங்கள தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டும். அவரது பொய்யைப் பார்ப்போம். அது மட்டடுமல்லாமல் இவரது அரசியலமைப்பைப் பற்றிய அறியாமையையும் பார்ப்போம் . அமெரிக்கா ஒரு கூட்டாட்சி அல்லது சமஷ்டி நாடாக இருப்பதாக அவர் கூறினார், ஆனால் அங்கே “அரசியலமைப்பில் சமஷ்டி முறைமை என்று எங்கும் எழுத்தப்படவில்லை” என மத்துக்கம, அகலவத்த பிரதேசத்தில் கூறியுள்ளார். அதாவது அவரின் தொனியில் சொன்னால் அமெரிக்க அரசியல் சாசனத்தில் பெயர் பலகை இல்லை என்கிறார். அவர் சொல்வது மிகவும் தவறு. சுமந்திரன் கூறியது: “உலக வல ;லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவினை எடுத்துக்கொண்டால் அதுசமஷ்டிக ; முறைமையைக் கொண்ட நாடு என்பதை அனைவரும ; அறிவார்கள்.ஆனால் அந்த நாட்டின் அரசியலமைப்பில் சமஷ்டி முறைமை என்று எங ;கும்எழுத்தப்படவில்லை.” அமெரிக்காவின் பெயர் பலகையில் உள்ள பெயர்: “Perfect Union” முதலாவதாக நாம் அவரைக் கேட்போம் , அமெரிக்காவில் ஆங்கிலத்தில் பெயர் பலகை இல்லை என்றால், ஏன் சிங்கள அரசியலமைப்பில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும்? ஏனெனில் தமிழன் விடு பேயன்? இரண்டாவதும் முக்கியமானதும், அமெரிக்க அரசியலமைப்பின் மேலே உள்ள ஆங்கில பதிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு: “form a more perfect Union” அல்லது தமிழில் “மிகவும் சரியான ஒன்றியம்” ஒன்றை உருவாக்கினின் கருத்து மாநில அரசுகள் அல்லது மாகாணங்களை சேகரிப்பது அரசியலமைப்பில் உள்ளது. இதன் கருத்து சமஷ்டி என்பது. i.e. அமெரிக்காவின் பெயர் பலகையில் உள்ள பெயர்: “Perfect Union” perfect Union அல்லது பூரண ஒன்றிணைப்பு என்பது கூட்டாட்சி அல்லது சமஷ்டி பிரதிநிதித்துவம் செய்கிறது. திரு நீலன் திருச்செல்வத்தின் அரசியலமைப்பும் அதே சொற்கள் என்று நினைவில் கொள்ளுங்கள்: Union Of Regions . சுமந்திரன் தனது பொய்களைத் பலவந்தமாக தமிழர்களுக்கு தள்ளுவதற்கு அவர் ஏன் கடினமாக முயற்சி செய்கிறார். ரி.என்.ஏ (TNA) பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனை வெளியே தள்ள தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். |
Be the first to comment