ஜூலை 11, 2018 இல், டிரம்ப்பிற்கான தமிழர்கள் “வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு இன்னும் அதிகமான காரமும் மற்றும் தைரியம் தேவை” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது.
இந்த பத்திரிகை வெளியீட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
1.
இந்திய, ஸ்ரீலங்காவை தனது நன்மைக்காக கட்டுப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் துரும்பாக கொண்டிருந்தது, ஆனால் தமிழ் மக்களைக் கொலை செய்வதர்க்கும் தமிழரின் சுதந்திர போராட்த்தை நசிக்கவும் இந்தியா வரம்பற்ற அதிகாரத்தை ஸ்ரீலங்காவுக்கு வழங்கிய போது இந்தியா இந்த துரும்பை இழந்தது .
2.
2009 ல் தமிழ் புலிகள் மற்றும் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்தது ஸ்ரீலங்கா சிங்களவர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று இந்தியா நினைத்தது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் வேறுவிதமாக காட்டப்படுகின்றன.
3.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் பின்னர் தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை முறியடித்து இந்தியா, சிங்கள மக்களை திருப்திப்படுத்த முடியும் என இந்தியா நினைத்தது. ஆனால் ஸ்ரீலங்கா வேறுபட்ட திட்டத்தைக் கொண்டிருந்தது, ஸ்ரீலங்கா சீனாவை இலங்கைக்கு வரவேற்றது. இது இந்தியாவுக்கு ஒரு பெரிய சோதனையாகும் (Checkmate ).
4.
அம்பாந்தோட்டை துறைமுகமானது 99 ஆண்டுகளுக்கு மேலாக சீனர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கும், மேலும் சீனாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில் இன்னும் பல ஒப்பந்தங்கள் நடைபெறவுள்ளது . சீனாவின் கட்டுப்பாடான அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்ரீலங்கா கடற்படை காலியிருந்து அம்பாந்தோட்டையில் தளம் இடுகிறது . இப்போது ஒரு கூட்டு ஸ்ரீலங்கா-சீன கடற்படை சக்தியாக இருக்கும். இது இந்தியாவிற்கு இன்னொரு தலை இடியை உருவாக்குகிறது.
5.
பிரதமர் மோடி இலங்கைக்கு வந்து போது, இலங்கையில் கூட்டுறவு கூட்டாட்சிக்கு (Coperative Federalism) உத்தரவாதம் அளித்துள்ளது என்றார் . தமிழர்களுக்கு வாக்குறுதியளிக்கும் உத்தரவாதங்களை திருப்தி செய்ய மோடி அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
6.
சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமிழ் தலைவர்கள், வடமாகாணத்தில் தமிழர்களுக்கு 40,000 வீடுகளைக் கட்டியெழுப்ப சீனர்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இது தமிழ் பகுதிகளில் சீன அணுகலை கொடுக்கும்.
7.
சீனர்களுக்கு தமிழ் தாயகத்திற்கு போக கிடைத்தால், தென் இந்தியாவிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவில் உள்ள புங்குடுதீவில் சீனத் தளம் அமைக்க முடியும்.
8.
இன்னும், தமிழர்களுக்குக் கூட்டுறவு கூட்டாட்சிக்கு பகிர்வை ஒப்புக் கொள்ள இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், தமிழ் மக்களை பலப்படுத்த முடியும். அது இலங்கையை பலவீனமாக்கும், இதனால் இந்தியா, சீனா அச்சுறுத்தலை சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
9.
யாழ்ப்பாண தமிழ் தலைநகரில் இருந்தபோது தமிழ் மக்களுக்கு அவர் உத்தரவாதம் அளித்த வாக்குறுதிகளையும் நம்பிக்கையையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்ற வேண்டும்.
டிரம்ப்பிற்கான தமிழர்கள் இறுதியில் தமது செய்தியில் கூறியது:
“தமிழர்கள் கடந்த காலத்தில் நடந்த எந்தவொரு நஷ்டத்திலிருந்தும் மீட்ககூடிய, கடின உழைப்பாளிகள். தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்ப்பதற்கு இந்தியாவுக்கு ஒரு தார்மீக கடமை உள்ளது என்று தமிழர்கள் இதுவரை நினைக்கிறார்கள். தமிழர்களின் கவலைகளை இந்தியா கவனித்துக்கொண்டால், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா இன்னும் கூடுதலான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும். இந்தியாவுக்கு வெளியில் (இலங்கையில் ) ஏராளமான பிரச்சினைகள் இருந்தால் இந்தியாவில் பல இன கலப்பின மற்றும் பல மொழி பேசப்படும் இந்தியாவிற்குள் பலவீன குறைபாடுகள் உண்டாகும். இந்த வழிகளால் சிந்திக்கும் போது , இந்தியா வலுவாக இருப்பதை காட்டுவதற்கு இந்தியா இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.”
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்
Be the first to comment