ஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்

1

ஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்

அன்புள்ள திரு. ஆளுநர்,

ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் தமிழரின் வேண்டுகோள் என்னவென்று நீங்கள் கேட்கிறீர்கள். இதனை ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிக்கு தெரிவிக்க விரும்புகிறீர்கள் என பல தமிழர்களும் தமிழ் பத்திரிகைகளும் கூறுகிறார்கள்.

தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் உங்களிடம் வந்து தங்கள் வேண்டுகோளை தெரிவிக்க அஞ்சிகிறார்கள்.

ஆனால் நாம் அவர்களை போனில் அழைத்தபோது, ​​அவர்கள் வெளிப்படுத்த பல வேண்டுகோளை தெரிவித்தார்கள். அவர்களது ஆலோசனைகளில் பெரும்பான்மையினரை நாங்கள் கீழே பட்டியலில் போட்டுள்ளோம்.

தமிழர்களின் ஜெனீவாவுக்கு கொண்டு செல்ல வேண்டிய செய்திகள் பின்வருமாறு:

1. இலங்கை போர்க்குற்றங்களை விசாரணைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புதல் என கேளுங்கள்.
2. எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இறுதியான தீர்மானத்தில், தமிழர்கள் தங்கள் அரசியல் தீர்வை தீர்மானிக்க தாம் விரும்புவதை நிர்ணயிக்க சர்வசன வாக்கெடுப்பு நடத்த பட வேண்டும் என கேளுங்கள்.
3. போஸ்னியாவின் சமஷடி அரசியலமைப்பை இலங்கையில் நடைமுறை செய்யலாம் என நீங்கள் பரிந்துரைக்கலாம். இந்த அரசியலமைப்பானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இனப் போரை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது மூன்று இனங்களும் சமாதானமாக வாழ்ந்து வருகின்றன.
4. தமிழர் தாயகத்தில் ஸ்ரீலங்கா போர் குற்றம் புரிந்த, தமிழரின் கற்பு அழிக்கும் சிங்கள இராணுவத்தை அகற்றுவதற்கு , ஐ.நா. அமைதிகாக்கும் படைகளை அனுப்பும் படி அவர்களை கேளுங்கள்.
5. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில், தமிழர் தாயகத்தில் பௌத்த சிலை அமைப்பதை நிறுத்தல் , வடகிழக்கில் தமிழ் கலாச்சாரங்களை அழிப்பை நிறுத்தல் , சிங்கள குடியேற்றத்தை நிறுத்துதல் என்பவற்றை உள்ளிட வேண்டும் என கேளுங்கள்.
6. வட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி, மைத்திரி ஸ்ரீசேனவின் கைப்பாவையாக உள்ள ஆளுநரை அகற்றவும் என கேளுங்கள்.
7. பௌத்த அல்லாதவர்கள், இந்துக்கள் ஆகியோரின் படுகொலைகளை ஊக்குவிக்கும் மகா வம்சா பௌத்த புத்த சமயத்தின் மாநாட்டை

தமிழ் தாயகத்தில் நிறுத்த ஜெனிவாவில் கேளுங்கள்.

8. கடைசியாகவும், முக்கியமாகவும், எங்கள் வலிந்து காணாமல் போன அன்புக்குரியவர்களை கண்டுபிடிக்க ஐ.நா. அதிகாரத்தை பயன்படுத்துங்கள் என கேளுங்கள்.

திரு. ஆளுநரரே , ஜெனீவாவிற்கு எடுத்துச் செல்ல மேலே கூறப்பட்ட பரிந்துரைகளே போதுமானவை. இந்த ஆலோசனையை நீங்கள் உண்மையிலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் உள்ளிட கேட்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தமிழர்க்கு நீதி, இலங்கை இராணுவத்தை வெளியேற்றல், அரசியல் சுதந்திரம் முக்கியமானவை என்பதை கூறுங்கள்.

தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட் டவர்கள் செய்யாததை. மைத்திரியால் தேர்ந்தெடுக்கப்பட் ட நீங்கள் செய்வீர்கள் என எதிர் பார்க்கிறோம்.

நன்றி,

ஆசிரியர் குழு
தமிழ் புலம்பெயர் செய்திகள்.

குறிப்பு: நாங்கள் இக்கடிதத்தை மின்னஞ்சலில் ஆளுநரிடம் அனுப்பிக்கொண்டுள்ளோம், ஆனால் உள்ளூர் தமிழர்கள் அவரிடம் நேரடியாக ஒப்படைக்க முயற்சிக்கவும் .
நன்றி.

About Tamil Diaspora News.com 432 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.