அம்பிகாவிற்கு ஏன் இந்த அவசரம்? யாழ்ப்பாணம் தெரியாதவரை சுமந்திரன் அழைத்துவந்த இரகசியம்…
ஆதாரம்: https://www.jvpnews.com/srilanka/04/263762?itm_source=parsely-api?ref=recommended2
அம்பிகாவும் சுமந்திரனும்
நளினியும் சுமந்திரனும்
அடுத்து தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அம்பிகா சற்குணநாதன்.
இவர் கதிர்காமர்மற்றும் நீலன் திருச்செல்வத்தின் அரசியலின் நீட்சி சுமந்திரனின் Female version இவர்.
சிங்கள இன வாதத்தின் தமிழ் முகமே அம்பிகா சற்குணநாதன். ஆனால் தியாகங்கள் பல நிறைந்த தமிழரசுக் கட்சியின் வேட்பாளராம்.
தற்போது தேசியப் பட்டியலில் அவரது இடம் உறுதி செய்யபட்டிருக்கிறது.
மக்களின் அனுதாப வாக்குகளைப் பெறவும் அதனுடன் புலிகளினால் மாமனிதர் கவுரவமளிக்கப்பட்டவரின் மனைவி என்று மக்களை ஏமாற்றவும் ரவிராஜ் அவர்களின் மனைவியைப் பலிக்காடாயாக்கிவிட்டு தேசியப்பட்டியலில் அம்பிகாவின் இடத்தை உறுதி செய்திருக்கிறார் சுமந்திரன்.
இன அழிப்பு அரசால் சுமந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட புரொஜெக்ட் இது.
இவரை தேர்தலில் நிறுத்துவதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே மனித உரிமை ஆணையப் பதவியை விட்டு விலகுமாறு கொழும்பு ஆலோசனை கூறியதையடுத்து இவர் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்த போது எமக்குள் இருக்கும் சுமந்திரனின் தறுதலைகள் ” ஐ.நா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியதால் தனது பதவியை ராஜினாமா செய்த வீரப் பெண்” என்று கொக்கரித்ததை என்னவென்பது? நளினி ரட்ணராஜா என்ற ஒரு வேட்பாளருக்கு எதிராகக் காட்டிய தீவிரத்தை அம்பிகா விடயத்தில் நம்மவர் காட்டவில்லை.
இது ஒரு முரண்பாடு. நளினி ஒரு புலி எதிர்ப்பாளர் அத்துடன் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர். அவ்வளவுதான்.
ஆனால் அவர் வென்றாலும் அவரால் எமக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அதற்கான ஆளுமையோ, தகுதியோ, கொள்ளளவோ இல்லாதவர் அவர். ஆனால் அம்பிகா அப்படியல்ல. அவர் சுமந்திரனை விட மோசமான நச்சுப் பாம்பு. அம்பிகாவின் நுழைவு தமிழர் வரலாற்றை பல ஆண்டுகளுக்குப் பின் நோக்கித் தள்ளும் என்பதே யதார்த்தம்.
நன்றி, பரணி கிருஷ்ணரஜனி
Be the first to comment