|
அமெரிக்க தமிழர்கள் இதுவரை 1200 ரூபா சேகரித்திருக்கிறார்கள். இந்த பணத்தை வவுனியாவில் ஒரு நிருபரிடம் அனுப்பியுள்ளார்கள் . அவர்கள் அமெரிக்க பணத்தை இலங்கையின் ஒரு ரூபாய் நாணயமாக, 1200 நாணயமாக்குவார்கள். இந்த 1200 நாணயத்தையும் ஒரு பையில் போட்டு எமது தமிழ் இளைஞர்களிடம் கொடுக்கவுள்ளார்கள் நாங்கள் ஒவ்வொரு அமெரிக்க தமிழர்களிடம் ஒரு அமெரிக்க பெனியை-Penny (இலங்கை பணத்திற்கு 100 ரூபா சமமானதாக) அமெரிக்க தமிழர்களிடம் சேகரித்தோம். அமெரிக்க தமிழர்கள் அஞ்சல் மூலம் ஒரு பெனியை-Penny அனுப்பினார்கள். இந்த சேகரிப்பு தொலைபேசி அழைப்புகள் மூலம் நடாத்தபட்டது. எங்களது அமெரிக்க தமிழ் நண்பர்கள் இதற்காக நேரம் ஒதுக்கியதற்கும் அவர்களின் கொள்கைக்கும் எமது நன்றி. ஈ.பி.டி.பி.யின் ஒரு சதத்தை கூட , எமது மாவீரைகளையும் அவர்களுடன் இறுதிவரை பிரியாது இருந்து மரணித்துப்போன எமது சொந்தங்களையும் நினைவுபடுத்துவதற்கு பாவிப்பது பாவம் மட்டுமல்லாமல் அவர்களின் ஆத்மாக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எமது தாயகத்தில் உள்ள இளைஞர்களின் இந்த நல் முயற்சில் பங்குபெறுவதில் நாங்களும் பெருமைப்படுகிறோம். ஈ.பீ.டி.பீ. யாழில் மகிந்த அரசு இருந்த நேரத்தில், எங்கள் இளைஞர்களையும் பெண்களையும் வெள்ளை வான் மூலம் கடத்திச் சென்றது. பின்னர் அவர்களை பாலியல் வெறியுடன் இருந்த இனப்படுகொலைகார ஸ்ரீலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்தனர். இதை இலங்கையின் முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் அமெரிக்கா வெளியுறவுத் துறைக்கு தனது கேபிள் ஒன்றில் எழுதியிருந்தார். இந்த பிசாசுகளுக்கு (ஈ.பி. டி.பி.) வாக்களித்தவர்களுக்கு கூட நரகத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு. |
Be the first to comment