அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயல் பட வேண்டும்.இது தமிழர்களுக்கு ஒரு முக்கியமான காலம். சிங்கள அரசியல்வாதிகளால் பெருந்தொகையாக பணத்திற்கு விற்க முடியாத ஒரு வலுவான தலைமை தமிழர்களுக்குத் தேவை. முதலாவது, ஐநா மனித உரிமை சபை இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றி விசாரைணக்கு எடுத்தது. இரண்டாவது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அது சமஷ்டி மூலமோ அல்லது தனி நாடா என்று திட்டவட்டமாக கூறவில்லை. தமிழர்கள் மேற்கத்தேய நாடுகளுடன் நல்லுறவைப்பேண வேண்டியதன் அவசியத்தை நன்குணர்த்துகின்றது. இந்த வாய்ப்பை நாங்கள் நழுவவிரும்பவில்லை விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் சேர ஒவ்வொரு தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழர்கள் வேண்டிக் கொள்கின்றார்கள். அவர்கள் தமிழர்களுக்காக இதை செய்ய வேண்டும். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறைந்த அளவான வாக்குகளைப் பெற்றமைக்கு சுமந்தினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளுமே காரணமாகும் தமிழர்கள் ஒன்றுசேர்ந்தால் தமிழர்களின் சிதறிய வாக்குக்கள் மீண்டும் ஒன்று படுத்துவதோடு, இது சர்வதேச மட்டத்தில் விக்கினேஸ்வரனை வலுப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு லஞ்சம் பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளது. இதனால் அவர்கள் தார்மீக உள்ளுணர்வைக் கொண்டிருக்கவில்லை. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களை பிரதிநிதி படுத்தும் தகுதியை இழந்துள்ளார், இது கடந்த உள்ளூர் தேர்தல் முடிபுகள் காட்டுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு , 2010 தேர்தலில் சரத் பொன்சேகாவும் லஞ்சமும் , பின்னர் 2015 இல் விக்கிரமசிங்கவும் லஞ்சமும் , வடகிழக்கு பிரிவினையை சுமந்திரன் ஏற்றுக்கொண்டதுக்கு முஸ்லீம் வணிக நபர்களின் லஞ்சமும் , “ஏக்கியராஜ்ஜிய” க்கு (சமஷ்டியை கை விட்டத்திற்கு) சிங்கள தனவந்தர்களின் லஞ்சமும், மேலும் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து லஞ்சப்பணமும் வந்தது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், எங் எங்கு லஞ்சம் வருகின்றதோ அதில் சுமந்திரன் 10% கமிஷன் எடுத்து வந்துள்ளார். அனைத்து யூதர்களும் அவர்களின் தாய்நாட்டிற்கு ஐக்கியப்படுத்த முடியுமென்றால், சிங்களம் தமிழ் மக்களுக்கு எந்த அரசியல் உரிமைகளையும் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஐக்கியப்பட முடியுமென்றால் , ஸ்ரீலங்கா முஸ்லீம்கள் அனைவருமே மெக்காவில் ஐக்கியப்பட முடியுமென்றால் ஏன் இந்த தமிழர்கள் ஐக்கியப்பட முடியாது? தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு தமிழ் அரசியல் கட்சிகளும் விக்னேஸ்வரனுக்கு பின் ஐக்கியப்பட வேண்டும். தமிழ்த் தலைமைகள் ஐக்கியப்படமுடியாவிட்டால், அவர்கள் தமிழ் சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டோராக கருதப்படுவர். இவர்கள் தமிழர்களின் முதலாளிகள் அல்ல, தமிழர்களின் பணியாளர்கள்! தமிழர்களாகிய நாங்கள் கேட்கின்றோம் நீங்கள் அரசியலில் ஒன்று பட வேண்டும்!! இல்லையேல், தமிழினத்தின் ஒற்றுமையை சிதைக்காமல் அரசியில் இருந்து ஓதுங்கிவிடுங்கள்!!! புலம் பெயர்ந்த தமிழர்களின் செய்திகள் |
Be the first to comment